ஓசூரில் மாநகராட்சியில் மேயர் ஆய்வு பணிகளை மேற்கொண்டார் - தமிழக குரல்™ - கிருஷ்ணகிரி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Saturday 12 March 2022

ஓசூரில் மாநகராட்சியில் மேயர் ஆய்வு பணிகளை மேற்கொண்டார்

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் மாநகராட்சிக்கு உட்பட்ட வார்டு எண்-14 லட்சுமி நாராயண நகர்
குடியிருப்பு பகுதிகளில் இருந்து பொதுமக்கள் ஸ்ரீநகர் சிட்கோ தொழிற்சாலைகளில் இருந்து
வெளியேறும் கழிவுநீர் குடியிருப்பு பகுதிகளில் தேங்கியும், குடியிருப்பு
சாலைகளில் பாய்ந்தும், குடியிருப்புகளில் அமைக்கப்பட்டுள்ள ஆழ்துளை
கிணறு நிலத்தடி நீரில் கலந்தும் குடிநீரை குடிக்க இயலாத
அளவில் நீர் மாசுபட்டுள்ளதாக ஓசூர் மாநகராட்சி மேயர் S A.சத்யாEx.MLA அவர்களிடம் புகார் மனு அளித்தனர்.

புகார் மனுவின் பேரில் நேரடியாக சென்று பொது மக்களிடம் குறைகளை கேட்டறிந்ததோடு சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் தொலைபேசியில் தொடர்பு கொண்டு இந்த புகார் குறித்து உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு அறிவுறுத்தினார்.

No comments:

Post a Comment

Post Top Ad