ஊத்தங்கரை, டிச.24:
ஊத்தங்கரையில் செயல்பட்டு வரும் வித்யா விகாஸ் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில், 23.12.2025 (செவ்வாய்க்கிழமை) கிறிஸ்துமஸ் மற்றும் ஆங்கில புத்தாண்டு விழா வெகுவிமர்சையாக நடைபெற்றது. இவ்விழாவிற்கு பள்ளியின் தாளாளர் திரு. C. சக்திவேல் அவர்கள் தலைமை தாங்கினார். பள்ளியின் கல்வி முதல்வர் திரு. D. கோவிந்தராஜ் மற்றும் நிர்வாக முதல்வர் திரு. S. மணிகண்டன் ஆகியோர் தொடக்க உரையாற்றினர். விழாவிற்கு துணை முதல்வர் திருமதி. T. மலர்விழி அவர்கள் வரவேற்புரையாற்றினார்.
வித்யா விகாஸ் அறக்கட்டளையின் தலைவர் திரு. C. பழனிவேல் மற்றும் செயலாளர் திரு. S. சிற்றரசு ஆகியோர் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினர். மேலும் இவ்விழாவின் சிறப்பு விருந்தினர்களாக திரு. Fr. சூசைராஜ், Parish Priest, Sacred Heart Cathedral Church, தருமபுரி மற்றும் திரு. Fr. டேனியல் அம்ப்ரோஸ், துணை முதல்வர், தூய நெஞ்ச கல்லூரி, திருப்பத்தூர் ஆகியோர் கலந்து கொண்டு மாணவ மாணவிகளுக்கு வாழ்த்துக்கள் தெரிவித்ததுடன் சிறப்புரையும் ஆற்றினர்.
விழாவில் மழலையர் பள்ளி மாணவ, மாணவிகள் தங்களின் மழலை நாடகம் மற்றும் நடன நிகழ்ச்சிகள் மூலம் அனைவரையும் கவர்ந்தனர். இந்நிகழ்ச்சியில் பள்ளியின் இருபால் ஆசிரியர்கள், மாணவ, மாணவிகள் மற்றும் பெற்றோர்கள் பெருந்திரளாக கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர். இறுதியாக பள்ளியின் நிர்வாக அலுவலர் திரு. V. சஞ்சய் அவர்கள் நன்றியுரை வழங்க, விழா இனிதே நிறைவுற்றது.


No comments:
Post a Comment