சூளகிரி பகுதிகளில் தொற்றா நோய் கண்டுபிடிப்பு முகாம் - தமிழக குரல்™ - கிருஷ்ணகிரி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Thursday 24 February 2022

சூளகிரி பகுதிகளில் தொற்றா நோய் கண்டுபிடிப்பு முகாம்

சூளகிரி வட்டாரத்தில் தொற்றா நோய் கண்டுபிடிப்பு முகாம்


மாண்புமிகு தமிழக முதல்வர் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் அவர்களின் ஆணைப்படி, மக்கள் நல்வாழ்வுத் துறையில் மக்களைத் தேடி மருத்துவம்,இன்னுயிர் காப்போம்,வருமுன் காப்போம்,கண்ணொளி காப்போம் போன்ற திட்டங்கள் சிறப்பாக செயல்பட்டு வருகின்றன.

 தமிழகம் முழுவதும் புதிய திட்டமான தொற்றா நோய்கள் கண்டுபிடிப்பு சிறப்பு முகாம் ஆரம்பித்து நடைபெற்று வருகிறது.கிருஷ்ணகிரி மாவட்டத்தில் மாவட்ட ஆட்சியர் டாக்டர் ஜெயச்சந்திர பானு ரெட்டி  தலைமையில் அவர்களின் உத்தரவின் படியும்  சுகாதாரத்துறை துணை இயக்குனர் மரு. கோவிந்தன்  வழிகாட்டுதலின் படியும்,மாவட்டத்தில் உள்ள 61 ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் இன்று தொற்றா நோய் கண்டுபிடிப்பு முகாம் நடைபெற்றது.அந்தந்த மருத்துவ அலுவலர்கள் தலைமையில் நடைபெற்ற இம்முகாமில் 18 வயதிலிருந்து 29 வரையிலான ஆண்களுக்கு வாய்ப் புற்றுநோய், ரத்த அழுத்தம் சர்க்கரை நோய் போன்றவைகளும், 30 வயதிற்கு மேற்பட்ட பெண்களுக்கு ரத்த அழுத்தம், சர்க்கரை நோய் ,வாய்ப் புற்றுநோய், மார்பகப் புற்றுநோய், கர்ப்பப்பை வாய் புற்றுநோய் போன்றவைகளும் இருக்கிறதா என்று செவிலியர்களால் ஆய்வு செய்யப்பட்டனர்.

சூளகிரி வட்டாரத்தில் மாவட்ட நலக்கல்வியாளர்  எம்.சப்த மோகன்  மேற்பார்வையில் பேரிகை, காமன்தொட்டி அத்திமுகம், சூளகிரி, உத்தனப்பள்ளி போன்ற ஆரம்ப சுகாதார நிலையங்களில் சிறப்பு முகாம்கள் நடைபெற்றது.

ஓசூர் வட்டாரத்தில் வட்டார மருத்துவ அலுவலர் விவேக் அவர்களின் தலைமையிலும், மாவட்ட பூச்சியியல் வல்லுனர்  முத்து  மாரியப்பன் அவர்களின் மேற்பார்வையிலும் இம் முகாம்கள் நடைபெற்றன 
பேரிகையில் அதன் மருத்துவ அலுவலரான வீணா, அத்தி முகத்தில் மரு.படேஸ்வரன்,சூளகிரியில் மருத்துவர் அபிநயா, உத்தனப் பள்ளியில் மருத்துவர் ரஜினி கலையரசன்,காமன் தொட்டியில் மருத்துவர் அயோத்தி தலைமையிலும்,செவிலியர்கள் சோனியா,ராஜலட்சுமி, ரேவதி, ஆய்வுக்கூடநுட்புனர்கள் திருமதி. புனிதா, வேணி,சுகாதார ஆய்வாளர் திரு. குறளரசன் மற்றும் பகுதி சுகாதார செவிலியர்கள்,  கிராம சுகாதார செவிலியர்கள்,இடைநிலை சுகாதாரசேவை வழங்குனர்கள்  போன்றோர் இம்முகாம்களில் கலந்து கொண்டு எண்ணற்ற பயனாளிகளை கண்டுபிடித்தனர்.மாவட்டத்தில்  நடைபெற்ற இம் முகாம்களை துணை இயக்குனர் அவர்களும், தொற்றா நோய்களுக்கான மாவட்ட திட்ட அலுவலர்  திருலோகன் மேற்பார்வையிட்டார்

No comments:

Post a Comment

Post Top Ad