கிருஷ்ணகிரி அருகே முன்விரோத காரணமாக ஒருவர் கைது - தமிழக குரல்™ - கிருஷ்ணகிரி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Thursday, 24 February 2022

கிருஷ்ணகிரி அருகே முன்விரோத காரணமாக ஒருவர் கைது

கிருஷ்ணகிரி அருகே  முன்விரோதம் காரணமாக  ஒருவர் கைது
 
கிருஷ்ணகிரி மாவட்டம் தளி காவல் நிலைய பகுதியில் பாலதொட்டனப்பள்ளி கிராமத்தை சேர்ந்த சீனிவாசன் என்பவருக்கும் அதே ஊரை சேர்ந்தவருக்கு முன்விரோதம் இருந்து வந்த நிலையில் எதிரி செல்போனில் அடிக்கடி சீனிவாசனக்கு போன் செய்து தொல்லை கொடுத்து வந்த நிலையில் .

 22.02.2022 ம் தேதி பாலதொட்டனபள்ளி நஞ்சேகவுடா மளிகை கடை அருகே  நின்றுகொண்டே சீனிவாசனுக்கு போன் செய்து தகாத வார்த்தையால் திட்டியதாக கூறப்படுகிறது.
 சீனிவாசன் தனது தம்பியுடன் நேரில் சென்று கேட்டதற்கு இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டு எதிரி மறைத்து வைத்திருந்த சிறிய கத்தியால் சீனிவாசனின் இடது புறம் முதுகில் குத்தி ரத்த காயம் ஏற்படுத்தி அதே கத்தியை காட்டி உன்னை கொல்லாமல் விடமாட்டேன் என மிரட்டி சென்றதாக  சீனிவாசன் கொடுத்த புகாரின் பேரில் வழக்கு பதிந்து எதிரியை தளி போலீசார்  கைது செய்து நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தி சிறையில் அடைத்தனர்.

No comments:

Post a Comment

Post Top Ad