கிருஷ்ணகிரியில் மகாபாரதம் தெருக்கூத்து விழா - தமிழக குரல்™ - கிருஷ்ணகிரி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Monday 14 March 2022

கிருஷ்ணகிரியில் மகாபாரதம் தெருக்கூத்து விழா

கிருஷ்ணகிரி் மாவட்டம்  கூளியம் ஊராட்சிக்கு உட்பட்ட அம்மனேரி, ஓம்பலகட்டு, சவுளூர் ஆகிய கிராமத்திற்கு உட்பட்ட
ஸ்ரீ திரெளபதி அம்மன் திருக்கோவிலின் 2-ம் ஆண்டு மகாபாரத மகோற்சவ விழா கடந்த 2-ம் தேதி கொடி ஏற்றத்துடன் துவங்கியது..
நாள்தோறும் அம்மனுக்கு சிறப்பு பூஜைகளுடன் தர்மபுரி மாவட்ட நாடக கலைக்குழுவின்
மகாபாரத தெருக்கூத்து நிகழ்ச்சிகளும் நடைபெற்று வருகிறது.
இந்த மகாபாரத தெருக்கூத்தில் முக்கிய நிகழ்வுகளில் ஒன்றான அர்சுணன் தபசு என்ற நாடகம் நடைப்பெற்றது

இதில் கெளரவர்களை கூண்டோடு அழிக்க சிவப்பெருமானிடம் பாசுபதம் என்ற ஆயுதம் பெற, அர்சுணன் கோவில் முன்பாக அமைக்கப்பட்டு இருந்த
தபசு மரத்தின் கீழ் சிவப்பெருமானுக்கு காட்டு மலர்களைக் கொண்டு சிறப்பு பூஜைகள் செய்த பின் தபசு மரத்தில் ஏறும் நிசழ்ச்சி நடைபெற்றது.
மேலும் இதுபோன்ற நிகழ்சசிகள் நடத்தப்படுவதால் குழந்தைப் பாக்கியம் இல்லாதங்களுக்கு குழந்தை பாக்கியமும் கிடைப்பதோடு, நல்ல மழை பெய்து விவசாயமும் செழிக்கும் என்ற நம்பிக்கையும் இந்த கிராம மக்களிடையே உள்ளது என்பது குறிப்பிடதக்கது.
இரவு துவங்கி பகல் முற்பகல் வரை நடைபெற்ற இந்த நிகழ்ச்சியினை
அம்மனேரி, ஓம்பல கட்டு, சவுளூர் மட்டுமின்றி, மாதேப்பட்டி, செம்படமுத்தூர் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் இருந்து ஏராளமான மக்கள் கலந்துக் கொண்டு அம்மனை சாமிசரிசனம் செய்து வழிப்பட்டதுடன்,அர்சுணன் தபசு என்ற இதிகாச நிகழ்வினையும் கண்டு களித்தனர்.
இந்த விழாவிற்கான ஏற்படுகளை அம்மனேரி, ஓம்பலகட்டு, சவுளூர், ஆகிய கிராமங்களை சேர்ந்த ஊர் கவுண்டர்கள்,
‘மந்திரி கவுண்டர்கள் உள்ளிட்ட கிராம மக்களும் சிறப்பாக செய்து இந்தனர்கள்.

No comments:

Post a Comment

Post Top Ad