PMC கல்லூரியில் காசநோய் ஒழிப்பு தின விழிப்புணர்வு நிகழ்ச்சி - தமிழக குரல்™ - கிருஷ்ணகிரி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Monday 28 March 2022

PMC கல்லூரியில் காசநோய் ஒழிப்பு தின விழிப்புணர்வு நிகழ்ச்சி

கிருஷ்ணகிரி மாாவட்டம் ஓசூர் பி.எம்.சி டெக் பாலிடெக்னிக் கல்லூரியின் நாட்டு நலம் பணி திட்ட செயல்பாடுகளின் ஒரு பகுதியாக 24 மார்ச் " உலக காசநோய் தடுப்பு விழிப்புணர்வு நாள் " முன்னிட்டு இன்று கிருஷ்ணகிரி மருத்துவமனை மருத்துவர் சுகந்தா , துணை இயக்குநர், காச நோய் தடுப்பு, கிருஷ்ணகிரி. தலைமையிலான மருத்துவ குழுவினர் கல்லூரி வளாகத்தில் மாணவர்களுக்கு காச நோய் விழிப்புணர்வு குறித்த கருத்தரங்கம் மேற்கொண்டனர். 

இதில் சுமார் 150 மேற்பட்ட மாணவர்கள் பங்குபெற்று காச நோய் வர காரணம், அதன் அறிகுறிகள், அதனை தடுக்கும் வழிமுறைகள் குறித்து அறிந்து பயன் பெற்றனர். 
முன்னதாக இவ்விழாவிற்கு பி.எம். சி கல்வி நிறுவனங்களின் செயலாளர் திரு. பி. குமார் அவர்கள் தலைமை தாங்கினார், அறங்காவலர் திருமதி பி. மலர் முன்னிலை வகித்தார், பாலிடெக்னிக் மற்றும் ஐ.டி.ஐ இயக்குநர் திரு. என். சுதாகரன் அறிமுக உரையாற்றினார், முதல்வர் திரு. என். பாலசுப்ரமணியம் துவக்கி வைத்தார் மேலும் இவ்விழாவினை நாட்டு நலப்பணி திட்ட அலுவலர் திரு. கி. அருண்குமார் மற்றும் மாணவர்கள் ஏற்பாடு செய்திருத்தினர். விழா சிறப்பாக நடைபெற்றது.

No comments:

Post a Comment

Post Top Ad