கார் மீது தனியார் பேருந்து மோதியதில் பெண் பலி - தமிழக குரல்™ - கிருஷ்ணகிரி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Sunday, 27 March 2022

கார் மீது தனியார் பேருந்து மோதியதில் பெண் பலி



சூளகிரி அருகே தேசிய நெடுசாலையில் ஒரே குடும்பத்தை சேர்ந்த கார் மீது பஸ் மோதி இளம்பெண் உயிரிழப்பு. 7 பேர் படுகாயம்.

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் உள்ள டிவிஎஸ் நகரை சேர்ந்த ராஜா என்பவர் தனது 8 பேர் கொண்ட குடுமபத்துடன் கிருஷ்ணகிரி கேஆர்பி அணைக்கு தீதி கொடுக்க ஓசூரில் இருந்து வந்துள்ளனர். அப்போது சென்னை பெங்களூரு தேசிய நெடுசாலையில் சூளகிரி அருகே இராயகோட்டை மேம்பாலம் மீது வந்த போது ஓசூரில் இருந்து வேலூர் நோக்கி சுற்றுலா சென்று கொண்டிருந்த பேருந்து ராஜா கார் மீது பலமாக மொதியது. இதில் கார் கட்டுபாட்டை இழந்து சாலையில் உள்ள தடுப்பு சுவரில் மோதி சீர்குளைந்தது.

 இந்த விபத்தில் காரில் பயணம் செய்த ராஜாவின் மனைவி சாரதா சம்பவயிடத்திலேயே பரிதபமாக உயிரிழந்தார். மேலும் காரில் இருந்த 7 பேருக்கும் படுகாயம் அடைந்தனர். இதையடுத்து தகவல் அறிந்து வந்த சூளகிரி போலிசார் காரில் இருந்தவர்களை மீட்டு ஆம்பிலன்ஸ் மூலம் ஓசூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு அனுப்பி வைத்தனர். 

இதையடுத்து இந்த விபத்து குறித்து சூளகிரி போலிசார் வழக்கு பதிவு செய்து விசாரனை நடத்தி வருகின்றனர். மேலும் இந்த விபத்தால் சென்னை பெங்களூர் தேசிய நெடுசாலையில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. 

தீதி கொண்டு சென்ற குடும்பத்தில் 1 இளம் பெண் உயிரிழந்து 7 பேர் படுகாயம் அடைந்த சம்பவம் இப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

No comments:

Post a Comment

Post Top Ad