போச்சம்பள்ளி தனியார் பாலிடெக்னிக் கல்லூரியில் இலவச மின் இணைப்பு பெற்ற விவசாயிகளுக்கு கலந்துரையாடல் நிகழ்ச்சி நடைபெற்றது. - தமிழக குரல்™ - கிருஷ்ணகிரி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Saturday 16 April 2022

போச்சம்பள்ளி தனியார் பாலிடெக்னிக் கல்லூரியில் இலவச மின் இணைப்பு பெற்ற விவசாயிகளுக்கு கலந்துரையாடல் நிகழ்ச்சி நடைபெற்றது.

கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி தனியார் பாலிடெக்னிக் கல்லூரியில் ஓராண்டில் 1லட்சம் மின் இணைப்பு பெற்ற விவசாயிகளிடம் மாண்புமிகு தமிழக முதலமைச்சர் இணையவழி கலந்துரையாடல் நிகழ்ச்சி நடைபெற்றது, இதில் ஒரு வருடத்தில் ஒரு லட்சம் விவசாய மின் இணைப்பு பெற்றவர்களிடம் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னையில் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான தலைமை அலுவலகத்தில் இருந்து காணொலி காட்சி மூலமாக பங்கேற்று கலந்துரையாடும் விழா நடைபெற்றது. 

இதில் போச்சம்பள்ளியில் உள்ள தனியார் பாலிடெக்னிக் கல்லூரியில் இலவச விவசாய மின்இணைப்பு பெற்ற விவசாயிகள் கலந்து கொள்ளும் நிகழ்ச்சிநடைபெற்றது. இதில் போச்சம்பள்ளி உபகோட்டத்திற்கு உட்பட்ட பண்ணந்தூர், போச்சம்பள்ளி, நாகரசம்பட்டி, அரசம்பட்டி, கொடமாண்டப்பட்டி, போச்சம்பள்ளி உள்ளிட்ட பிரிவு அலுவலகங்களுக்கு உட்பட்ட பகுதிகளில் 455 பயனாளிகள் பயன்பெற்றனர். இந்நிகழ்ச்சிக்கு போச்சம்பள்ளி உதவி செயற்பொறியாளர் ஸ்டாலின் தலைமை வகித்தார், போச்சம்பள்ளி உதவி மின் பொறியாளர் கார்த்திகேயன் வரவேற்றார், புளியம்பட்டி ஊராட்சி மன்ற தலைவர் எஸ்.ஆர்.ரங்கநாதன், உதவி பொறியாளர்கள் அருள், வெங்கடேசன், கார்த்திக், இலவச விவசாய மின்இணைப்பு பெற்ற 455 விவசாயிகள், பொதுமக்கள் மற்றும் மின்வாரிய  அதிகாரிகள் கல்ந்து கொண்டுள்ளனர். 

No comments:

Post a Comment

Post Top Ad