கிருஷ்ணகிரியில் புனித வெள்ளி அனுசரிப்பு - தமிழக குரல்™ - கிருஷ்ணகிரி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Friday, 15 April 2022

கிருஷ்ணகிரியில் புனித வெள்ளி அனுசரிப்பு

கிருஷ்ணகிரியில் புனித வெள்ளி அனுசரிப்பு

புனித வெள்ளி அனுசரிக்கும் வகையில், கிருஷ்ணகிரியில் சிலுவைப்பாதை நிகழ்வு நடைபெற்றது.

கிருஷ்ணகிரி நகரில் அமைந்துள்ள தூய பாத்திமா அன்னைத் திருத்தலத்தில், புனித வெள்ளியையொட்டி பெரிய சிலுவைப்பாதை என்னும் நிகழ்வு நடைபெற்றது.

திருத்ததலத்தின் பங்குத்தந்தை அருட்திரு. இசையாஸ் தலைமையில் நடைபெற்ற இந்த பெரிய சிலுவைப் பாதையின் போது, இயோசுநாதர் சிலுவையை சுமந்து சென்றதன் நினைவாக, ஆலயத்தில் குடியிருந்த கிறிஸ்தவர்கள் தங்களுடைய தோல்களில் பாரமான சிலுவையை சுமந்து, தங்களை வருத்திக் கொண்டனர். இதில் ஏராளமான கிறிஸ்தவர்கள் பங்கேற்றனர்.

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கந்திகுப்பம்,சுண்டம்பட்டி, எலத்தகிரி, ஒசூர், தேன்கனிக்கோட்டை, சூளகிரி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் உள்ள கிறிஸ்தவ தேவாலயங்களில் பெரிய சிலுவைப்பாதை சிறப்பு வழிபாடு நடைபெற்றது.

No comments:

Post a Comment

Post Top Ad