ஒற்றை காட்டுயானை தாக்கி விவசாயி பலி - தமிழக குரல்™ - கிருஷ்ணகிரி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Saturday 9 April 2022

ஒற்றை காட்டுயானை தாக்கி விவசாயி பலி

வேப்பனப்பள்ளி அருகே ஒற்றை காட்டு யானை தாக்கி விவசாயி சம்பவ இடத்திலேயே தலை நசுங்கி உயிரிழப்பு

கிருஷ்ணகிரி மாவட்டம் வேப்பனப்பள்ளி அருகே உள்ள கொங்கனப்பள்ளி,எப்ரி மகாராஜகடை ஆகிய வனப்பகுதிகளில் 12க்கும் மேற்பட்ட காட்டு யானைகள் முகாமிட்டுள்ளது.இந்த காட்டு யானைகள் அவ்வப்போது ஊருக்குள் வந்து விவசாய நிலங்களை நாசம் செய்வது தொடர்ந்து நடைபெற்று வருகிறது. 

இந்த நிலையில் இன்று காலை கொங்கனப்பள்ளி வனப்பகுதியில் இருந்து ஊருக்குள் விவசாய நிலத்தில் புகுந்த ஒற்றை காட்டு யானை அந்த பகுதியில் இன்று அதிகாலை 5 மணிக்கு விவசாய நிலத்திற்கு சென்றுகொண்டிருந்த திம்மப்பா நாயுடு 60 என்பவரை ஓட ஓட விரட்டி தலை நசுங்கி மிதித்து கொன்றது. இதில் திம்மப்பநாயுடு சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் தலை நசுங்கி உயிரிழந்தார். இதையடுத்து காலை 7 மணிக்கு குடும்பத்தினர் திம்மப்பாநாயுடு வயலுக்கு சென்றவர் திரும்பி வரவில்லை என்று சென்று பார்த்தபோது அவரது உடல் நசுங்கி இருந்தது கண்டு அதிர்ச்சி அடைந்தனர். 

பின்னர் வனத்துறைக்கும் காவல்துறைக்கு தகவல் தெரிவித்த பொதுமக்கள் தகவல் அறிந்து விரைந்து வந்த காவல்துறை மற்றும் வனத்துறை அதிகாரிகள் திம்மப்பாநாயுடு உடலை கைப்பற்றினர். அப்போது விவசாயிகள் வனத்துறை அதிகாரிகளிடம் தொடர்ந்து காட்டு யானைகள் அட்டகாசத்தால் இப்பகுதி விவசாயிகளின் உயிர்ப்பலிகள் அதிகரித்து வருவதாகவும் இதனை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுப்பது என்ன, உயிர் பலிகளுக்கு நிவரானம் வழங்க கோரி என்று கேள்வி எழுப்பினர். இதையடுத்து வனத்துறை காப்பாளர் மகேந்திரன் விவசாயிகளிடம் சமரச பேச்சுவார்த்தை ஈடுபட்டனர். தொடர்ந்து காட்டு யானைகளை உடனடியாக வெளியேற்றவும் , யானைகள் விவசாய நிலங்களுக்கு வரவிடமால் கண்டிப்பாக விரட்டப்படும் என்று உறுதி அளித்ததை அடுத்து நிவாரண தொகை 5 லட்சத்தில் முதற்கட்டமாக ரூபாய் 50 ஆயிரம் காசோலையை குடும்பத்தினரிடம் வழங்கப்பட்டது. இதையடுத்து விவசாயிகள் பொதுமக்கள் பேச்சுவார்த்தை முடிந்தவடைந்து நிலையில் உடலை கைப்பற்றி ஆம்புலன்ஸ் மூலம் கிருஷ்ணகிரி அரசு மருத்துவ கல்லூரிக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்கு பதிவு செய்துள்ள வேப்பனப்பள்ளி போலீசார் சம்பவம் குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் கடந்த 6 மாதங்களுக்கு முன்பு நேர்லகிரி பகுதியில் ஒற்றை காட்டு யானை தாக்கி 2 விவசாயிகள் உயிரிழந்த சம்பவம் தற்போது மீண்டும் ஒரு விவசாயியை ஒற்றை காட்டு யானை கொன்றுள்ளது. இதனால் இப்பகுதியில் விவசாயிகள் பொதுமக்கள் பெரும் பீதியிலும் அச்சத்திலும் உள்லனர். இச்சம்பவம் இப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

No comments:

Post a Comment

Post Top Ad