நிலம் பிரச்சினை சம்மந்தமாக ஊரை விட்டு தனி குடும்பம் ஒதுக்கப்பட்டது - தமிழக குரல்™ - கிருஷ்ணகிரி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Monday 11 April 2022

நிலம் பிரச்சினை சம்மந்தமாக ஊரை விட்டு தனி குடும்பம் ஒதுக்கப்பட்டது

கிருஷ்ணகிரி அருகே நிலப்பிரச்சனை காரணமாக தனி குடும்பத்தை ஊரைவிட்டு ஒதுக்கப்பட்டது


கிருஷ்ணகிரி மாவட்டம் பில்லனகுப்பம் ஊராட்சிக்குட்பட்ட பில்லனக்குப்பம் கிராமத்தில் வசித்து வரும் பார்த்தசாரதி என்பவர் அந்த கிராமத்தில் விவசாயம் செய்து குடும்பத்துடன் வாழ்ந்து வருகின்றனர்.


கடந்த ஜனவரி மாதம் தனக்கு சொந்தமான நிலத்தில் அருகே வசிக்கும் தனிநபர் சாலை வசதி கேட்டு பார்த்தசாரதியிடம் தகராறில் ஈடுப்பட்டுள்ளார்.இந்த நிலப்பிரச்சனை சம்மந்தமாக தகராறு செய்தவர் மீது குருப்பரப்பள்ளி காவல் நிலையத்தில் பார்த்தசாரதி நடவடிக்கை எடுக்க கோரி மனு அளிக்கிறார்.மனுவை விசாரணை செய்த போலீசார் இதன் சம்மந்தமாக இரு தரப்பினரும் அழைத்து காவல்நிலையத்தில் வைத்து விசாரணை நடத்தினார்.

போலீசார் விசாரணை தனக்கு சொந்தமான நிலத்தில் யாருக்கும் வழிவிடுவதாக இல்லை என கூறி காவல் நிலையத்தில் இருந்து வெளியேறுகிறார் பார்த்தசாரதி பின்னர் மேலும் போலீசார் விசாரணையில் நடவடிக்கை எடுக்க வேண்டாம் எனவும் ஊரில் உள்ள பெரியோர்களால் முடிவு எடுத்து பின்னர் தகவல் அளிக்கிறேன் என பார்த்தசாரதி கூறியுள்ளார்.

பின்னர் ஊரில் உள்ள பெரியோர்களால் ஒன்றினைந்து நிலபிரச்சனை சம்மந்தமாக பேசப்பட்டபோது. ஊரின் கட்டுப்பாட்டை மதிக்காமலும் அவமானம் செய்ததாகவும் நீ காவல் நிலையம் சென்றது தவறு என கூறி ஊர் பெரியோர்களால் ஊர் கட்டுப்பாடு என்ற முறையில் பார்த்தசாரதி குடும்பத்தை ஊரை விட்டு ஒதுக்கி வைத்ததாக கூறப்படுகிறது.

ஊரைவிட்டு ஒதுக்கப்பட்ட பார்த்தசாரதியிடம் கிராம மக்கள் பேசினால் ரூபாய் 25000 அபராதம் மற்றும் பார்த்தசாரதி கிராம மக்களிடம் பேசினால் 1 இலட்சம் அபராதம் விதிக்கப்படும் என கிராம பெரியோர்களால் கட்டப்பஞ்சாயத்து செய்ததாக பாதிக்கப்பட்ட பார்த்தசாரதி கூறினார்

ஊரைவிட்டு தன் குடும்பத்தை ஒதுக்கப்பட்டதாக மனமுடைந்த பார்த்த சாரதி காவல்நிலையத்தில் சம்பந்தப்பட்ட நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி மீண்டும் புகார் மனு அளிக்கப்பட்டது.

ஊரைவிட்டு தன் குடும்பத்தை ஒதுக்கப்பட்டதாகவும் , கட்டப்பஞ்சாயத்து என்ற பெயரில் அபராதம் விதிக்கப்பட்டுள்ளதை குறித்தும் பார்த்தசாரதி அளித்த புகாரில் பேரில் குருப்பரப்பள்ளி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


மேலும் ஊர்கட்டுப்பாடு என்ற பெயரில் கலப்பு திருமணம் , காதல் திருமணம் மற்றும் ஊர் கட்டுப்பாட்டை மதிக்காமலும் இருந்தால் கட்டப்பஞ்சாயத்து என்ற பெயரில் இலட்சம் கணக்கில் அபராதம் விதிக்கப்பட்டுவதாக பாதிக்கப்பட்டவர்கள் தெரிவிக்கின்றனர்.மேலும் ஊர்கட்டுப்பாடு என்ற பெயரில் அபராதம் என்ற பெயரில் பணத்தை கொள்ளை அடிக்கும் நபர்கள் மீது மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்களும் , பாதிக்கப்பட்டவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்

No comments:

Post a Comment

Post Top Ad