கிராமத்தில் புகுந்த காட்டுயானை கூட்டம் விரட்டியடிப்பு - தமிழக குரல்™ - கிருஷ்ணகிரி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Monday 4 April 2022

கிராமத்தில் புகுந்த காட்டுயானை கூட்டம் விரட்டியடிப்புகிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை அருகே உள்ள ஜவளகிரி வனச்சரகத்திற்கு உட்பட்ட கும்ளாபுரம், கங்கனப்பள்ளி, ஆச்சுபாலம் உள்ளிட்ட பகுதிகளில் 40-க்கும் மேற்பட்ட யானைகள் முகாமிட்டு பயிர்களை சேதப்படுத்தி வந்தன. இதனால் தமிழக, கர்நாடக மாநில எல்லையில் உள்ள கிராம மக்கள் பீதி அடைந்தனர். மேலும் விவசாய பயிர்கள் சேதமாகி வந்தன.

இதுகுறித்து கிராமக்கள் வனத்துறைக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் மாவட்ட வன அலுவலர் கார்த்திகேயனி, கர்நாடக மாநில வனத்துறையிடம் பேசினார். இதையடுத்து ஜவளகிரி வனச்சரகர் சுகுமார் தலைமையிலான வனத்துறையினர் மற்றும் கர்நாடக வனத்துறையினர் இணைந்து வனப்பகுதிகளில் பல்வேறு குழுக்களாக முகாமிட்டிருந்த 40 யானைகளையும் கர்நாடக மாநிலம் பன்னார்கட்டா வனப்பகுதிக்கு விரட்டினர். இதனால் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

No comments:

Post a Comment

Post Top Ad