தளி அருகே
நீர்நிலை பகுதி ஆக்கிரமிப்பு அகற்றக் கோரி கிராம மக்கள் கோரிக்கை
கிருஷ்ணகிரி மாவட்டம் தளியை அடுத்த சிவனப்பள்ளி கிராமத்தில் அமைந்துள்ள ஏரியில் ஆக்கிரமிப்பு நிலங்களை அகற்ற கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர் .
தளியை அடுத்த தாராவேந்திரம் ஊராட்சிக்குட்பட்ட சிவனப்பள்ளி கிராமத்தில் அமைந்துள்ள முத்துநாயக்கன் ஏரி சுமார் 20 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது.
சிவனப்பள்ளி கிராமத்தை சேர்ந்த நாகபூஷணம் , சின்னப்பரெட்டி , இராமச்சந்திர ரெட்டி , வெங்கடேஷ் ரெட்டி ஆகியோர் முத்துநாயக்கன் ஏரி பகுதியில் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டதாக கூறப்படுகிறது .இந்நிலையில் ஏரி நீர்நிலை பகுதி ஆக்கிரமிப்புகளை அகற்ற கோரி கிராம மக்கள்பலமுறை சம்மந்தப்பட்ட துறைகளுக்கு மனு அளித்தும் எவரும் நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை என கிராம மக்கள் குற்றம் சாட்டி வருகின்றனர்.
மேலும் சிவனப்பள்ளி சுற்றுவட்டார பகுதி கிராமங்களுக்கு முத்துநாயக்கன் ஏரி தான் நீர் ஆதாரமாக திகழ்ந்து வருகிறது.
மேலும் ஆக்கிரமிப்புகளை அகற்ற கோரி கிராம மக்கள் கூறுகையில் ஆக்கிரமிப்பாளர்கள் மிரட்டுவதாக கூறப்படுகிறது
ஆக்கிரமிப்புகளை அகற்றி நடவடிக்கை எடுக்க தளி ஒன்றிய விவசாய சங்க செயலாளர் கணேஷ் ரெட்டி , துணை ஒன்றிய செயலாளர் சங்கரப்பா, முனிரெட்டி , சினிவாச ரெட்டி , மஞ்சுநாத் , கிருஷ்ணா ரெட்டி மற்றும் சிவனப்பள்ளி , அரப்பள்ளி கிராம மக்கள் கலந்துகொண்டனர்
No comments:
Post a Comment