ஒன்றிய தொடக்கப்பள்ளியில் ஐந்தாம் வகுப்பு மாணவ மாணவிகளுக்கு பிரிவு உபசார விழா நடைபெற்றது - தமிழக குரல்™ - கிருஷ்ணகிரி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Saturday 14 May 2022

ஒன்றிய தொடக்கப்பள்ளியில் ஐந்தாம் வகுப்பு மாணவ மாணவிகளுக்கு பிரிவு உபசார விழா நடைபெற்றது

*மத்தூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் ஐந்தாம் வகுப்பு மாணவ மாணவிகளுக்கு பிரிவு உபசார விழா நடைபெற்றது* 

கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி வட்டம் மத்தூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் ஐந்தாம் வகுப்பு மாணவ மாணவிகளுக்கு பிரிவு உபசார விழா புதியதாக தேர்ந்தெடுக்கப்பட்ட பள்ளி மேலாண்மை குழு தலைவர் எம்.திவ்யாமகேந்திரன் துணைத் தலைவர் சி.மாதையன் மேலாண்மைக் குழு நிர்வாகிகள் அனைவரும் ஒன்று சேர்ந்து பள்ளியின் முதல் விழாவாக கொண்டாடப்பட்டது இவ் விழாவிற்கு சிறப்பு விருந்தினராக மணிமேகலை மாவட்ட கல்வி அலுவலர் மத்தூர் லோகநாயகி வட்டார கல்வி அலுவலர் மத்தூர் நாசர் வட்டார கல்வி அலுவலர் மத்தூர் சிவப்பிரகாசம் வட்டார மேற்பார்வையாளர் மத்தூர் சுதாகர் துணை ஆய்வாளர் மத்தூர் ஆகியோர் தலைமை வகித்தனர் தலைமையாசிரியர் ஆரோக்கியமேரி முன்னிலை வகித்து அனைவரையும் வரவேற்று பேசினார்
மணிமேகலை மாவட்ட கல்வி அலுவலர் மத்தூர் சிறப்புரை ஆற்றியதாவது பள்ளி மாணவ மாணவர்களுக்கு பிரிவு உபசார விழா என்பது 12ஆம் வகுப்பு முடிந்த மாணவ மாணவிகளுக்கும் கல்லூரி படிப்பு முடித்த மாணவ மாணவிகளுக்கும் நடைபெறும் முதல்முறையாக ஐந்தாம் வகுப்பு முடித்த மாணவ மாணவர்களுக்கு பிரிவு உபசார விழா நடைபெற்றது மத்தூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் என்று மகிழ்ச்சியுடன் தெரிவித்தார் தொடர்ந்து பேசுகையில் மாணவ மாணவிகள் அடுத்தபடியாக ஆறாம் வகுப்பிற்கு அரசு பள்ளிக்கூடத்திற்கு செல்லும் பொழுது ஒழுக்கத்துடனும் நன்றாக படித்து பள்ளியின் பெருமை சேர்க்க வேண்டும் என்று மாணவ மாணவியர்களுக்கு எடுத்துரைத்தார் நிகழ்ச்சியில் பள்ளி மாணவ மாணவிகளுக்கு கேக் வெட்டி மாணவ மாணவர்களுக்கு வழங்கினார்கள் மற்றும் பள்ளியின் மேலாண்மைக் குழு சார்பில் ஐந்தாம் வகுப்பு முடித்த 68 மாணவ மாணவிகளுக்கு சுவர் கடிகாரம் நினைவுப் பரிசுகளாக வழங்கப்பட்டது இந்நிகழ்வில் பள்ளியின் ஆசிரியர் ஆசிரியைகள் மாணவ மாணவர்களின் பெற்றோர்கள் இல்லம் தேடி கல்வி ஆசிரியர்கள் என அனைவரும் கலந்து கொண்டனர்

No comments:

Post a Comment

Post Top Ad