கொட்டிதீர்த்த கனமழை : விவசாயிகள் மகிழ்ச்சி - தமிழக குரல்™ - கிருஷ்ணகிரி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Saturday, 14 May 2022

கொட்டிதீர்த்த கனமழை : விவசாயிகள் மகிழ்ச்சி

வேப்பனப்பள்ளி தாலுகா செய்தியாளர் பிரதிப்குமார்-9786628175,6380804744


வேப்பனப்பள்ளி சுற்றுவட்டாரப் பகுதிகளில் ஒரு மணி நேர கனமழை.பொதுமக்கள் மகிழ்ச்சி

கிருஷ்ணகிரி மாவட்டம் வேப்பனப்பள்ளி சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த ஒரு வாரமாக வெயில் பொதுமக்களை வாட்டி வதைத்தது. இந்த நிலையில் மதிய நேரத்தில் வேப்பனப்பள்ளி சுற்றுவட்டாரப் பகுதிகளில் அக்னி வெயில் காரணமாக பொதுமக்களும் வாகன ஓட்டிகள் வெளிவராமல் சாலைகளும் கடைகளும் வெறிச்சோடி காணப்பட்டது. இந்த நிலையில் இரண்டு நாட்களாக வானம் மேகமூட்டத்துடன் தூறல் மழையில் இருந்த நிலையில் இன்று காலை முதல் வானம் மேக மூட்டமாக காணப்பட்டது. இந்த நிலையில் இன்று மாலை  பெய்த கன மழை காரணமாக ஒரு மணி நேரம் பெய்த கனமழையால் நாச்சிக்குப்பம் நேர்லகிரி, தீர்த்தம், குந்தாரப்பள்ளி, பல்லேரிப்பள்ளி,குந்தாரப்பள்ளி ஆகிய பகுதிகளில் கனமழை பெய்தது. இதனால் சாலைகளிலும் வயல்வெளிகளிலும் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. அக்னி வெயில் வாட்டிவதைத்து வந்த நிலையில் தற்போது கன மழை பெய்துள்ளதால் இப்போது வெப்பம் தணிந்து குளிர்ந்த சீதோஷ்ண ஏற்பட்டுள்ளது. இதனால் பொதுமக்கள் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

No comments:

Post a Comment

Post Top Ad