கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்டம் துவக்கம் : - தமிழக குரல்™ - கிருஷ்ணகிரி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Monday 23 May 2022

கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்டம் துவக்கம் :

சூளகிரி அருகே

 கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்டம் துவக்கம்

ரூ.227 கோடி மதிப்பிலான கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்டம் 
முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் தலைமைச் செயலகத்தில், வேளாண்மை - உழவர் நலத் துறை சார்பில் 1,997 கிராமப் பஞ்சாயத்துக்களில் உள்ள 9 இலட்சம் விவசாய குடும்பங்கள் பயன்பெறும் வகையில், ரூ.227 கோடி மதிப்பிலான கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்டத்தினை தொடங்கி வைத்தார்.


இந்நிலையில் கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி வட்டாரத்திற்க்குட்பட்ட 
  சென்னப்பள்ளி , மேலுமலை , மாரண்டப்பள்ளி , இம்மிடிநாயக்கனப்பள்ளி , தியாகரசனப்பள்ளி , அயர்னப்பள்ளி,காமன்தொட்டி , பெத்தசிகரலப்பள்ளி ஆகிய ஊராட்சியில் வேளாண்துறை சார்பில் அமைக்கப்பட்ட முகாமில் வீடியோ காணொலி மூலம் முதலமைச்சரின் வேளாண் வளர்ச்சித் திட்ட பணிகளை துவக்கி வைத்தார்.

சென்னப்பள்ளி ஊராட்சியில் தொலைக்காட்சி மூலம் காணொலி நிகழ்ச்சியை விவசாயிகள் காண ஏற்ப்பாடு செய்யப்பட்டிருந்தது.
நிகழ்ச்சியில் ஏராளமான விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டு பயனடைந்தனர்.

திட்ட வளர்ச்சி முகாமில் விவசாயிகளுக்கு வீட்டு தோட்டம் அமைத்தல் , விவசாயிகளின் வருமானத்தை பெருக வரப்பு ஓரங்களில் படிச்செடிகள் மற்றும் மரங்கள் நட , கோடைகாலங்களில் மாற்றுப் பெயர்கள் காய்கறி சாகுபடி ஊக்குவித்தல் மற்றும் நெகிழி கூடைகள் மற்றும் பிளாஸ்டிக் டிரம் வழங்கல் மேலும் பயனாளிகளுக்கு பண்ணை இயந்திரங்கள் மற்றும் தென்னை கன்று , பழவகை செடிகள் வழங்கப்பட்டது.

வேளாண் நிகழ்ச்சி முகாமில் சென்னப்பள்ளி ஊராட்சி மன்ற தலைவர் செல்வம், திமுக ஒன்றிய பொறுப்பாளர் வெங்கடேஷ், முன்னாள் ஒன்றிய செயலாளர் அன்பு சேகரன் ,இளைஞர் அமைப்பாளர் முனிசந்திரன் ,பஞ்சாயத்து செயலாளர் பால்ராஜ், கழக பிரமுகர் மஞ்சுநாதன் ,ஒன்றிய இளைஞர் துணை அமைப்பாளர் சுரேஷ் ,கழக அவைத் தலைவர் சந்திரசேகர் ,மேடு பள்ளி கிருஷ்ணன் வெங்கட்ராஜ், சுண்டகிரி பாலச்சந்திரன் திமுக பிரமுகர் வெங்கடேஷ் மற்றும் திமுக கழக நிர்வாகிகள் கலந்துக்கொண்டர்.

வேளாண் துறைசார்ப்பில் துணை இயக்குநர் உழவர் பயிற்சி நிலைய அலுவலர் சண்முகம், வேளாண்மை உதவி இயக்குனர் புவனேஸ்வரி, வேளாண்மை அலுவலர் சதீஷ்குமார் ,உதவி வேளாண்மை அலுவலர் தமிழ்செல்வி, மற்றும் உதவி தொழில்நுட்ப மேலாளர் முகமது ரபிக் ஆகியோர் கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment

Post Top Ad