நிகழ்ச்சியில் கலந்துகொண்டு திரும்பிய பேருந்து கவிழ்ந்து விபத்து. - தமிழக குரல்™ - கிருஷ்ணகிரி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Sunday, 22 May 2022

நிகழ்ச்சியில் கலந்துகொண்டு திரும்பிய பேருந்து கவிழ்ந்து விபத்து.

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் தனியார் வேலைவாய்ப்பு முகாம் இருந்து திரும்பி தனியார் பேருந்து கவிழ்ந்து 15 பேர் படுகாயம்.

ஓசூரில் தனியார் வேலைவாய்ப்பு முகாமில் 150 கற்கும் மேற்பட்ட தொழிற்சாலைகள் பங்கு பெற்றது.
நிகழ்ச்சியில் திமுக சேப்பாக்கம், திருவல்லிக்கேணி சட்டமன்றத் உறுப்பினர் உதயநிதி ஸ்டாலின் மற்றும் அமைச்சர்கள், சட்டமன்றத் தொகுதி உறுப்பினர்கள்  பங்கேற்றனர்.

வேலைவாய்ப்பு முகாம் கிருஷ்ணகிரி மாவட்ட சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து ஏராளமான இளைஞர்கள் மாணவ மாணவிகள் தனியார் பேருந்துகள் மூலும் சென்று வேலைவாய்ப்பு முகாமில் கலந்துகொண்டனர்.

இந்நிலையில் மத்தூரில் இருந்து இளைஞர்களை ஏற்றிக்கொண்டு சென்ற தனியார் பேருந்து ஓசூர் சீதராம்மேடு என்ற இடத்தில் ஓட்டுனர் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து தேசிய நெடுஞ்சாலையில் கவிழ்ந்து விபத்துக்குள்ளனது.

தனியார் பேருந்தில் பயணம் செய்த 15க்கும் மேற்கொண்டார் படுகாயம் அடைந்தனர். இந்த விபத்தில் அப்பகுதில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட போலீசார் காயமடைந்தவர்களை மீட்டு ஓசூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

No comments:

Post a Comment

Post Top Ad