கோவில் உண்டியலை உடைத்து கொள்ளை : கிராம மக்கள் புகார் - தமிழக குரல்™ - கிருஷ்ணகிரி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Sunday 22 May 2022

கோவில் உண்டியலை உடைத்து கொள்ளை : கிராம மக்கள் புகார்

போச்சம்பள்ளி அருகே.

 கோவில் உண்டியலை உடைத்து கொள்ளை அடித்து சென்றதாக கிராம மக்கள் போலீசில் புகார் !

கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அடுத்த அகரம் அருகேயுள்ள விளங்காமுடி கிராமத்தில் 500க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இந்த கிராமத்தில் 300 ஆண்டுகள் பழமை வாய்ந்த பெருமாள் கோயில் உள்ளது இந்த கோவில் அறங்காவலராக விளங்காமுடி கிராமத்தைச் சேர்ந்த கோவிந்த முதலியார் என்பவரது மகன் முனுசாமி உள்ளார். 
ஐந்து தலைமுறைகளாக அறங்காவலராக கோவிலை நிர்வகித்து வருகின்றனர்.

இந்நிலையில் கோவில் நிர்வகிக்கும் பொறுப்பை அகரம் கிராமத்தை சேர்ந்த சிலர் கோவிலில் உரிமை கோருவதாக கடந்த மூன்று ஆண்டுகளாக பிரச்சினை ஏற்பட்டு வருவாய் கோட்டாட்சியர் தலைமையில் விசாரணையில் உள்ளது. இந்நிலையில் கோவிலில் உள்ள உண்டியலில் பணம் கடந்த இரண்டு வருடங்களாக எடுக்காமல் பணம் உண்டியலில் இருந்துள்ளது. இதில் ஜெயபிரகாஷ் நிலையிலான கும்பல் உண்டியலில் இருந்த பணம் மற்றும் நகைகளை கடந்த 16-04-2022 அன்று கொள்ளையடித்து சென்றதாகவும் இதுகுறித்து நாகரசம்பட்டி காவல் நிலையத்தில் புகார் மனு அளித்ததாகவும் புகாரின் பேரில் நடவடிக்கை எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது இந்நிலையில் நேற்று மதியம் விளங்காமுடி கிராமத்திற்கு வந்த 15 க்கும் மேற்பட்ட நபர்கள் உண்டியலை உடைத்து தூக்கி சென்றதாகவும் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென கிராம மக்கள் நாகரசம்பட்டி காவல் நிலையத்தில் புகார் மனு அளித்தனர். 

மேலும் புகாரின் பேரில் நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுவதாக கிராம மக்கள் தெரிவித்துள்ளனர்.

No comments:

Post a Comment

Post Top Ad