வணிக கடை மற்றும் நிறுவனங்களில் தமிழில் பெயர் பலகை வைத்திட மனு : - தமிழக குரல்™ - கிருஷ்ணகிரி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Sunday 22 May 2022

வணிக கடை மற்றும் நிறுவனங்களில் தமிழில் பெயர் பலகை வைத்திட மனு :

சூளகிரியில் 

வணிக கடை மற்றும் நிறுவனங்களில் தமிழில் பெயர் பலகை வைத்திட மனு

கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி வட்டாரத்திற்க்கு உட்பட வணிக கடை மற்றும் நிறுவனங்களில் ஆங்கிலம் மற்றும் இந்தியில் பெயர் பலகை உள்ள நிலையில் தற்போது அனைத்தும் தமிழில் பெயர் மாற்றி வைத்திட வேண்டும் என சூளகிரி நாம் தமிழர் கட்சியின் சார்பில் வட்டாட்சியரிடம் மனு அளிக்கப்பட்டது.


தமிழக அரசாணைப் படி தமிழகத்தில் உள்ள அனைத்து கடைகள் மற்றும் நிறுவனங்களில் தமிழில் பெயர் பலகைகள் மாற்றிட வலியுறுத்தபட்ட நிலையில்
பொதுமக்களுக்கு புரியாத வகையில் இந்தி மற்றும் ஆங்கிலம் மொழியில் பல்வேறு நிறுவனங்களில் பெயர் பலகைகள் வைக்கப்பட்டுள்ளது.


இந்நிலையில் கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி நாம் தமிழர் கட்சியின் சார்பில் நடுவன் ஒன்றிய தலைவர் கண்ணன் மற்றும் செயலாளர் முருகேசன் , பொருளாளர் முபாரக்,செய்தி தொடர்பாளர் சீனிவாசன் , மற்றும் கட்சியின் நிர்வாகிகளுடன் சூளகிரி வட்டாரத்தில் கடை மற்றும் நிறுவனங்களில் பெயர் பலகைகள் தமிழில் வைக்கப்பட வேண்டும் என சூளகிரி வட்டாட்சியரிடம் மனு அளிக்கப்பட்டது.

No comments:

Post a Comment

Post Top Ad