கொத்தமல்லி விலை சரிவு: விவசாயிகள் கவலை - தமிழக குரல்™ - கிருஷ்ணகிரி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Saturday 30 July 2022

கொத்தமல்லி விலை சரிவு: விவசாயிகள் கவலை

கொத்தமல்லி விலை சரிந்து வருவதால், விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.கீரை வகையை சேர்ந்த கொத்தமல்லி இலை, உணவுப் பொருட்களில் மணத்துக்காக சேர்க்கப்படுகிறது. பல்வேறு மருத்துவ குணங்களை கொண்டுள்ள கொத்தமல்லி, விதைக்கப்பட்ட, 40வது நாட்களில் அறுவடைக்கு தயாராகிவிடும்

கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி பகுதியில் வியாபாரிகளே, ஆட்களை அழைத்து வந்து, அறுவடை செய்து, நேரடியாக கொள்முதல் செய்கின்றனர்.சில நாட்களாக சந்தைகளுக்கு, கொத்தமல்லி இலை வரத்து அதிகரித்து விலை சரிந்து வருகிறது. தோட்டத்தில் கிலோ, 6 முதல், 8 ரூபாய்க்கே கொள்முதல் செய்யப்பட்டு வருகிறது.

விவசாயிகள் கூறுகையில், ''கொத்தமல்லி இலை கொள்முதல் விலை, 25 ரூபாய் வரை கிடைத்தால் மட்டுமே லாபம். போதிய, விலையில்லாததால் கொத்தமல்லி இலைகளை அறுவடை செய்யாமல், தோட்டத்திலே விடும் நிலை ஏற்பட்டுள்ளது. சில விவசாயிகள், பறிப்புக் கூலிக்குக்கூட கட்டுப்படியாகாத விலையால் பாதிக்கப்பட்டுள்ளனர்என்றனர்.

No comments:

Post a Comment

Post Top Ad