பயணியர் நிழற்கூடத்தை சுத்தம் செய்த தன்னார்வலர்கள். - தமிழக குரல்™ - கிருஷ்ணகிரி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Friday 23 September 2022

பயணியர் நிழற்கூடத்தை சுத்தம் செய்த தன்னார்வலர்கள்.

கிருஷ்ணகிரி மாவட்டம், மத்தூர் ஒன்றியம், கெரிகேப்பள்ளி ஊராட்சிக்கு உட்பட்ட கெரிகேப்பள்ளி - ஊத்தங்கரை சாலை அத்திவீரம்பட்டி பிரிவு சாலையில் அமைந்துள்ளது மில் பேருந்து நிறுத்த நிழற்கூடம் இங்கு  பல்வேறு கிராமங்களை சார்ந்த பொதுமக்களும், பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகளும் பேருந்துக்காக பயன்படுத்தும் முக்கிய பேருந்து நிறுத்தமாக திகழ்ந்து வருகின்றது.


இந்த நிழற்கூடம் முறையான பராமரிப்பு இல்லாமல் முட்புதர்களாலும் மதுமான பிரியர்களின் மது அருந்தும் இடமாக இருந்து வந்தது. நிழற்கூடம் உள்ளே மதுபாட்டில்கள் உடைக்கப்பட்டு காணப்படுவதாகவும், நிழற்கூடம்  பகுதியில் முற்கள் நிறைந்து உள்ளதால் கால் வைக்ககூட மாணவ, மாணவிகள் முதியோர்கள் முகம் சுழிக்கும் வண்ணமும், அச்சப்படுவதாகவும் பயணிகளும், மாணவ, மாணவிகளும் அறம் விதை அறக்கட்டளையை நிர்வாகிகளிடம் தொடர்பு கொண்டு நிழற்கூட பகுதியை தூய்மைப்படுத்த விடுத்த வேண்டுகோளின் காரணமாக அந்த இடத்தை கடந்த 22.09.2022 அன்று தனது குழுவினர்களுடன் உடனடியாக முட்புதற்களை அகற்றி உடைந்த மது பாட்டில்களையும் அகற்றி தூய்மைப்படுத்தினர், இந்த செயலை, மாணவ மாணவிகளும் பயணிகளும் பாராட்டினர்.

No comments:

Post a Comment

Post Top Ad