சூளகிரியில் வட்டார சுகாதார பேரவை கூட்டம் நடைபெற்றது. - தமிழக குரல்™ - கிருஷ்ணகிரி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Saturday 24 September 2022

சூளகிரியில் வட்டார சுகாதார பேரவை கூட்டம் நடைபெற்றது.

கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரியில் வட்டார சுகாதார பேரவை கூட்டம் நடைபெற்றது. சூளகிரி கேடிஆர் பேலஸில் நடைபெற்ற கூட்டத்தில் ஏராளமான பொதுமக்களும் , அரசு அலுவலர்களும் பங்கேற்றிருந்தனர்.


நிகழ்ச்சியில் சூளகிரி வட்டார வளர்ச்சி அலுவலர் சிவகுமார் மற்றும் வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் வெண்ணிலா ஆகியோர் கலந்து கொண்டு குத்துவிளக்கு ஏற்றி விழாவை துவைக்கி வைத்தனர். சூளகிரி வட்டாரத்தில் உள்ள அனைத்து துணை சுகாதார நிலையங்களில் குறைகள் மற்றும் அடிப்படை வசதிகள் குறித்து பொதுமக்களுக்கும் , அலுவர்களுக்கும் எடுத்துரைக்கப்பட்டது.


மேலும் சூளகிரியில் இயங்கி வரும் அன்னையின் பாதை அறக்கட்டளை சார்பில் "சுகாதார நிலையம் எவ்வாறு செயல்படுகிறது" என மக்கள் கருத்து கேட்பு என்ற தலைப்பில் பொதுமக்கள் அளித்த பதில்கள் மற்றும் குறைகளை கூட்டத்தில் திரையிட்டு காண்பிக்கப்பட்டது. மேலும் சூளகிரி வட்டார பகுதிகளில் உள்ள அனைத்து துணை சுகாதார நிலையங்களில் குடிநீர் வசதி , சாலை வசதி , நோயாளிகள் உட்கார வசதி, மின்சார வசதி, கழிவறை வசதி என பல்வேறு வசதிகளை பொதுமக்கள் கூட்டத்தில் கோரிக்கையாக முன் வைத்தனர்.


இந்த வட்டார சுகாதார பேரவை கூட்டத்தில் சூளகிரி அனைத்து அரசு அலுவலர்களும், சுகாதார நிலையத்தினரும் , அங்கன் வாடி பணியாளர்களும் , பொதுமக்களும் கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment

Post Top Ad