பள்ளியில் கழிவறையை சுத்தம் செய்ய வைத்த ஆசிரியர் இடைநீக்கம். - தமிழக குரல்™ - கிருஷ்ணகிரி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Saturday, 24 September 2022

பள்ளியில் கழிவறையை சுத்தம் செய்ய வைத்த ஆசிரியர் இடைநீக்கம்.

கிருஷ்ணகிரியை அடுத்த பர்கூரில் உள்ள கழிவறைகளை பெருக்க வைத்த சர்ச்சையில் சிக்கிய ஆசிரியர் இடைநீக்கம் செய்யப்பட்டிருக்கிறார்.


கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் அடுத்த மல்லப்பாடியில் 284 மாணவ மாணவிகள் படித்து வருகின்றனர். இந்த பள்ளியில் படிக்கும் மாணவர்கள் கழிவறையை சுத்தம் செய்வதாக வாட்ஸ் அப் குழுக்களில் ஒரு காணொளி பகிரப்பட்டது.


இதைத் தொடர்ந்து அந்த பள்ளியில் நேரடியாக விசாரணை நடத்தி அறிக்கை சமர்ப்பிக்குமாறு மத்தூர் மாவட்ட கல்வி அலுவலர் மணிமேகலைக்கு, கிருஷ்ணகிரி மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் கே.பி.மகேஸ்வரி உத்தரவிட்டார். இதையடுத்து அங்கு மாணவர்களிடம் நடத்திய விசாரணையில் அந்த பள்ளியில் தமிழ் பாட முதுகலை ஆசிரியர் அனுமுத்துராஜ், தலைமை ஆசிரியருக்கு அவப்பெயரை ஏற்படுத்த இந்த செயலில் ஈடுபட்டதாக தெரிய வந்தது. இந்த சம்பவம் குறித்து பள்ளி துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

No comments:

Post a Comment

Post Top Ad