ஓசூர் அருகே கிராமத்துக்குள் டிப்பர் லாரி வருவதை கண்டித்து கிராம மக்கள் கருப்புக்கொடி ஏந்தி கொட்டும் மழையில் சாலை மறியல். - தமிழக குரல்™ - கிருஷ்ணகிரி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Sunday 16 October 2022

ஓசூர் அருகே கிராமத்துக்குள் டிப்பர் லாரி வருவதை கண்டித்து கிராம மக்கள் கருப்புக்கொடி ஏந்தி கொட்டும் மழையில் சாலை மறியல்.

ஓசூர் அடுத்த கொரட்டகிரி அருகே சில கிரானைட் குவாரி மற்றும் கல் குவாரிகள் செயல்படுவதை அடுத்து அப்பகுதி கிராமத்தின் வழியாக டிப்பர் லாரிகள் வருவதை கண்டித்து கொட்டும் மழையும் பொருட்படுத்தாமல் கிராம மக்கள் கருப்பு கொடி ஏந்தி சாலை மறியலில் ஈடுபட்டனர்.

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு தேன்கனிக்கோட்டை தாசில்தார் வருகை தந்து கிராம மக்களிடையே சமாதானம் பேச்சு வார்த்தையில் ஈடுபட்ட போதும் அதை ஏற்க மறுத்த பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

No comments:

Post a Comment

Post Top Ad