அரசு மருத்துவமனைக்கு 11 இலட்சம் மதிப்பீட்டில் கருவிகள் - தமிழக குரல்™ - கிருஷ்ணகிரி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Friday 4 November 2022

அரசு மருத்துவமனைக்கு 11 இலட்சம் மதிப்பீட்டில் கருவிகள்

சூளகிரி பவர் கிரிட் சார்பாக 11 லட்சம் மதிப்பிலான மருத்துவ கருவிகள்

இன்று 2.11.22 , சூளகிரியில் அமைந்துள்ள மத்திய அரசின் நிறுவனமான பவர்கிரீட் கார்ப்பரேஷன் சார்பாக , பெரு நிறுவன சமூகப் பொறுப்பு நிதியிலிருந்து ரூபாய் பத்து லட்சத்தி 90 ஆயிரத்து 80 மதிப்பிலான மருத்துவ உபகரண கருவிகள் சூளகிரி அரசு மேம்படுத்தப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு வழங்கப்பட்டது.

இந்நிகழ்ச்சியை கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் திரு. வி. ஜெயச்சந்திர பானு ரெட்டி இ. ஆ .ப அவர்கள் தலைமை வகித்து தொடங்கி வைத்தார். சுகாதாரப் பணிகள் துணை இயக்குனர் மரு.ஜி. ரமேஷ் குமார் அவர்கள் முன்னிலை வகித்து திட்ட விளக்க உரை ஆற்றினார்.வட்டார மருத்துவ அலுவலர் திருமதி வெண்ணிலா. அவர்கள் வரவேற்புரை வழங்க, பவர் கிரீட் முதன்மை பொது மேலாளர் திரு. மிதிலேஷ் குமார், பொது மேலாளர் திரு. நிரஞ்சன் குமார் போன்றோர் மருத்துவக் கருவிகளை துணை இயக்குனர் சுகாதாரப் பணிகள் திரு. ஜி. ரமேஷ்குமார் அவர்களிடம் வழங்கினர் மற்றும் துணை இயக்குனர் அவர்கள் பவர் கிரிட் அலுவலர்களுக்கு பாராட்டு சான்றிதழை வழங்கி கௌரவித்தார்.


 அந்நிறுவனத்தின் முதன்மை பொது மேலாளர் திரு மிதிலேஷ் குமார் வாழ்த்துரை
வழங்கினார்.

துணை இயக்குனர் அலுவலக மாவட்ட நலக்கல்வியாளர் திரு. எம். சப்தமோகன் நன்றி உரை வழங்க நிகழ்ச்சி இனிதே நிறைவு பெற்றது.

இந்நிகழ்வில் வட்டார சுகாதார மேற்பார்வையாளர் திரு. அருள் தலைமையிலான சுகாதார ஆய்வாளர்கள் அனைவரும், சமுதாய செவிலியர் திருமதி. ஷியாமளா அவர்களின் தலைமையிலான செவிலியர்களும், மருத்துவர் திரு ராகவேந்திர குமார் அவர்களின் தலைமையில் மரு. நந்தினி ,மரு. அபிநயா மரு. கீதா மற்றும் ஆஷா மஸ்தூர் கள் அனைவரும் கலந்து கொண்டனர்.

இந்நிகழ்வில் உறிஞ்சு கருவி, வெப்பப் பாதுகாப்பு கருவி, அவசர ட்ராலி, மல்டி பேரா மானிட்டர் போன்ற உபகரணங்கள் வழங்கப்பட்டது.

No comments:

Post a Comment

Post Top Ad