பஸ்சை முந்தி செல்ல முயன்றபோது மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதியதில் டிரைவர் பலி. - தமிழக குரல்™ - கிருஷ்ணகிரி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Saturday 12 November 2022

பஸ்சை முந்தி செல்ல முயன்றபோது மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதியதில் டிரைவர் பலி.


ராயக்கோட்டை அருகே பஸ்சை முந்தி செல்ல முயன்றபோது மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதியதில் டிரைவர் பலியானார். மற்றொருவர் படுகாயம் அடைந்தார். டிரைவர் கிருஷ்ணகிரி மாவட்டம் ராயக்கோட்டை அருகே உள்ள தொட்டதிம்மனஅள்ளி ஊராட்சி முத்தம்பட்டியை சேர்ந்தவர் கண்ணன். 

இவருடைய மகன் பார்த்திபன் (வயது 22). கார் டிரைவர். அதே பகுதியை சேர்ந்தவர் சதானந்தன் மகன் முத்துராஜ் (21). இவர்கள் 2 பேரும் நண்பர்கள் ஆவர். இந்தநிலையில் நேற்று மாலை பார்த்திபன், முத்துராஜ் மோட்டார் சைக்கிளில் கெலமங்கலம் சென்றனர். பின்னர் மாலை அவர்கள் முத்தம்பட்டிக்கு திரும்பி கொண்டிருந்தனர். மோட்டார் சைக்கிளை பார்த்திபன் ஓட்டினார். நல்லராலப்பள்ளி பஸ் நிறுத்தம் பகுதியில் சென்றபோது, முன்னால் சென்ற தனியார் நிறுவன ஊழியர்கள் பஸ்சை பார்த்திபன் முந்த முயன்றார். 


அப்போது எதிரே வேகமாக வந்த டேங்கர் லாரி, மோட்டார் சைக்கிள் மீதுமோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட கார் டிரைவர் பார்த்திபன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். முத்துராஜ் படுகாயம் அடைந்தார். அவரை அந்த வழியாக சென்றவர்கள் மீட்டு சிகிச்சைக்காக ஓசூரில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 

No comments:

Post a Comment

Post Top Ad