கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அடுத்த எக்கூர் ஊராட்சி திருமணி வட்டம் கிராமத்தைச் சேர்ந்தவர் பார்த்திபன் கூலித் தொழிலாளியான இவர் தனது விவசாய நிலத்தில் ஜவ்வாது மலை அடிவாரப் பகுதியில் ஆட்டு கொட்டகை அமைத்து இருபதுக்கு மேற்பட்ட ஆடுகளை வளர்த்து வந்தார், நேற்று வழக்கம் போல் ஆடுகளை மேய்த்து விட்டு ஆட்டு கொட்டகைகளில் மூடி வைத்துவிட்டு, வீட்டுக்கு சென்று விட்டார்.
நள்ளிரவில் ஆடுகளின் அலறும் சத்தம் கேட்டு, ஓடி வந்து பார்த்த விவசாயி பார்த்திபன் ஆடுகள் ரத்த காயத்துடன் 16 ஆடுகள் இறந்ததையும் ,5 ஐந்து ஆண்டுகள் படுகாயத்துடன் உயிருக்கு போராடி வருகின்றனர், இது அந்த விவசாய குடும்பத்தினரரை பெரும் அதிர்ச்சியில் சோதனையில் ஆழ்த்தியுள்ளது, இது குறித்து தகவல் அறிந்த வனத்துறையினர் கிராம நிர்வாக அலுவலர்கள் ஊராட்சி பணியாளர்கள் காவல்துறையினர் விசாரணை செய்து வருகின்றனர்.
கூலித் தொழிலாளியின் ஆட்டுக்கோட்டையில் 16 ஆடுகள் மர்ம விலங்கு கடித்து இறந்த சம்பவம் பெரும் அந்த மக்களுடைய சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

No comments:
Post a Comment