தென்ப்பென்னை ஆற்றில் 1 இலட்சத்து 40 ஆயிரம் மீன் குஞ்சுகள் விடப்பட்டன. - தமிழக குரல்™ - கிருஷ்ணகிரி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Tuesday 3 January 2023

தென்ப்பென்னை ஆற்றில் 1 இலட்சத்து 40 ஆயிரம் மீன் குஞ்சுகள் விடப்பட்டன.


சூளகிரி அருகே  தேசிய மீன்வள மேம்பாட்டு வாரியம் மூலம் பிரதம மந்திரி மட்சிய சம்பட யோஜனா திட்டத்தின் கீழ் தென்பெண்ணை ஆற்றின் 1 இலட்சத்து 40 ஆயிரம் மீன் குஞ்சுகள் ஆற்றில் விடப்பட்டது.


கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரியை அடுத்த பாத்தகோட்ட கிராமத்தில் அமைந்துள்ள தென்ப்பென்னை ஆற்றில் 1 இலட்சத்து 40 ஆயிரம் மீன் குஞ்சுகள் விடப்பட்டன.



தேசிய மீன்வள மேம்பாட்டு வாரியம் மூலம் பிரதம மந்திரி மட்சிய சம்பட யோஜனா திட்டத்தின் மூலம் அழிவின்  நிலையில்  உள்ள நாட்டின மீன் குஞ்சுகளான கல்பாசு, மற்றும் சேல்கொண்டை, கட்லா, ரோகு, மற்றும் மிர்கால் அடங்கிய இந்திய பெருரக மீன்குஞ்சுகள் ஆற்றில் விடப்பட்டது.


இதன் மூலம் ஆற்றில் நாட்டின மீன் உற்பத்தி ஆண்டுக்கு 20 டன் மீன்கள் கூடுதலாக உற்பத்தி ஆகுவதற்கு வாய்ப்புள்ளதாகவும் மேலும் இப்பகுதியில் மீன்பிடி தொழில் செய்யும் மீனவர்கள் வாழ்வாதாரம் பாதுகாக்கவும்


பொது மக்களுக்கு நாட்டின மீன்கள் கிடைக்க பெறுவதற்கு வழி வகுப்பதோடு அழிவின் விளிம்பில் நிலையில் உள்ள நாட்டின மீன் இனங்களை பாதுகாக்க இத்திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது


இந்த நிகழ்ச்சியில் கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சி தலைவர் ஜெயசந்திர பானு ரெட்டி அவர்களின் முன்னிலையில் தென்சென்னை ஆற்றில் 1 இலட்சத்து 40 ஆயிரம் மீன் குஞ்சுகள் ஆற்றில் விடப்பட்டது.


மேலும் இந்த நிகழ்ச்சியில் மீளவளத்துறையினரும், வருவாய் துறையினரும் பங்கேற்றனர்

No comments:

Post a Comment

Post Top Ad