சூளகிரி அருகே வனப்பகுதி கிராம குடியிருப்புக்கள் அருகில் நீண்டநேரமாக சுற்றிவந்த ஒற்றைக்காட்டு யானையால் அப்பகுதி மக்கள் அச்சம். - தமிழக குரல்™ - கிருஷ்ணகிரி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Friday 30 December 2022

சூளகிரி அருகே வனப்பகுதி கிராம குடியிருப்புக்கள் அருகில் நீண்டநேரமாக சுற்றிவந்த ஒற்றைக்காட்டு யானையால் அப்பகுதி மக்கள் அச்சம்.


சூளகிரி அருகே வனப்பகுதி கிராம குடியிருப்புக்கள் அருகில் நீண்டநேரமாக சுற்றிவந்த ஒற்றைக்காட்டு யானையால் அப்பகுதி மக்கள் அச்சம்: சுற்றுப்பகுதி கிராம மக்களுக்கு வனத்துறையினர் எச்சரிக்கை விடுத்து வருகின்றனர்.கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரியை அடுத்த சானமாவு வனப்பகுதியில் 3 காட்டுயானைகள் தொடர்ந்து முகாமிட்டு வருகிறது.. இரவு நேரங்களில் உணவை தேடி வெளியே வரும் இந்த யானைகள் மீண்டும் அதிகாலை சானமாவு வனப்பகுதிக்குள் சென்று விடுகின்றன.


நேற்றிரவு 3 யானைகளிலிருந்து பிரிந்த ஒற்றைகாட்டுயானை நேற்றிரவு முதல் சூளகிரி தாலூக்காவிற்க்கு உட்பட்ட சினிகிரிப்பள்ளி என்ற வனப்பகுதி கிராமதில் உள்ள விளை நிலங்களில் சுற்றி வந்துள்ளது காலை நீண்டநேரமாகியும் வனப்பகுதிக்கு செல்லாததால் கிராம மக்கள் சானமாவு வனப்பகுதிக்குள் விரட்டி உள்ளனர்.மீண்டும் யானை ஊருக்குள் வரலாம் என கிராம மக்கள் அச்சம் தெரிவித்துள்ள நிலையில்ன சானமாவு வனப்பகுதி ஒட்டிய போடிச்சிப்பள்ளி, தேன்துர்க்கம்,அனுமந்தபுரம்,ஓபேப்பள்ளி உள்ளிட்ட கிராம மக்களுக்கு வனத்துறையினர் வனப்பகுதிக்கு ஆடு,மாடு மேய்ச்சலுக்கு செல்ல வேண்டாமெனவும், இரவு நேர விளைநில காவலுக்கு செல்ல வேண்டாமென பாதுகாப்பு எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

No comments:

Post a Comment

Post Top Ad