பதவி ஏற்றபின் முதல் நிகழ்ச்சியாக சர்வதேச மகளிர் தின விழா கொண்டாடப்பட்டது. அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் வளர்மதி மற்றும் ராஜீவ் காந்தி கல்வியியல் கல்லூரி சேர்மன் உஷா மூர்த்தி ஆகியோருக்கு சாதனை பெண்மணி விருதுகள் வழங்கப்பட்டன. காவேரிப்பட்டினம் அன்பு ஆதரவற்றோர் இல்லத்திற்கு 3000 மதிப்பிலான உணவுப் பொருட்கள் வழங்கப்பட்டது. நிகழ்ச்சிகளை முன்னாள் மண்டல துணைத் தலைவர் ராகேஷ் தொகுத்து வழங்கினார். விழா ஏற்பாடுகளை முன்னாள் தலைவர் சுரேஷ் பாபு தலைமையில் அருண் பிரசாத், வடிவேல், லட்சுமணன் பிரபாசண்,முகராஜ், விஜயகுமார், கேசவமூர்த்தி மற்றும் பலர் செய்திருந்தனர் செயலாளர் இன்ஜினியர் துரை விழாவிற்கு வந்திருந்த அனைவருக்கும் நன்றி கூறினார்.
இவ்விழாவில் சிறப்பு விருந்தினர்களாக பாலக்கோடு மூகாம்பிகை கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் மேலாண்மையில் துறை தலைவர் முனைவர். ப. மோகன்தாஸ், மோரணஹள்ளி அரசு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர், சிவசங்கரன் மற்றும் தமிழக அரசின் நல்ல ஆசிரியர் விருது பெற்ற காவேரிப்பட்டினம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி உடற்கல்வி இயக்குனர் பவுன்ராஜ் ஆகியோர் கலந்து கொண்டனர்.
No comments:
Post a Comment