சூளகிரி அருகே தேசிய நெடுசாலையில் இருசக்கர வாகனத்தில் இருந்து கிழே விழுந்த முதியவர் காயம் : மாவட்ட ஆட்சியர் காத்திருந்து 108 ஆம்புலன்சில் ஏற்றி வைத்த மனிதநேயத்திற்கு பாராட்டுக்கள் குவிந்து வருகின்றது
கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் தீபக் ஜேக்கப் அவர்கள், கிருஷ்ணகிரியிலிருந்து ஓசூரை நோக்கி தேசிய நெடுஞ்சாலையில் வந்துக்கொண்டிருந்தபோது
சூளகிரி அருகே தேசிய நெடுஞ்சாலையில் இருசக்கர வாகனத்தில் பின்னால் அமர்ந்து சென்ற நாராயணப்பா என்ற முதியவர் கிழே விழுந்தார் , சாலையில் விழுந்த முதியவர் காயங்களுடன் விழுந்து கிடப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்த மாவட்ட ஆட்சியர்
உடனடியாக காரிலிருந்து இறங்கி, முதியவரை மீட்டு 108 ஆம்புலன்சை தொடர்புக்கொண்டு, ஆம்புலன்ஸ் வரும் வரை காத்திருந்து முதியவரை சிகிச்சைக்காக அனுப்பி வைத்த அவரின் மனிதநேய செயலை பலரும் பாராட்டி வருகின்றனர்.

No comments:
Post a Comment