மத்தூர் பகுதிகளில் கொடி கட்டி பறக்கும் ரியல் எஸ்டேட் நிலம் விற்கும் தொழில். - தமிழக குரல்™ - கிருஷ்ணகிரி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Saturday 23 September 2023

மத்தூர் பகுதிகளில் கொடி கட்டி பறக்கும் ரியல் எஸ்டேட் நிலம் விற்கும் தொழில்.


கிருஷ்ணகிரி மாவட்டம் மத்தூர் ஒன்றியம் அந்தேரிப்பட்டி ஊராட்சி இதன் சுற்றி உள்ள பகுதிகளில் கொடி கட்டி பறக்கும் ரியல் எஸ்டேட் நிலம் விற்கும் தொழில், அந்தேரிப்பட்டி ஊராட்சியில் விவசாய நிலங்களை ரியல் எஸ்டேட்டாக மாறி உள்ளது குறிப்பிடத்தக்கது.

உதாரணமாக விவசாய நிலங்களை செல்வந்தர்கள் வாங்கி வீட்டுமனைகளாக அவர்களே பிரித்து பொதுமக்களுக்கு வழங்குவது வாடிக்கையாக உள்ளது, இது அரசாங்கத்திற்கு முழுமையாக இழப்பு ஏற்படும் சூழ்நிலை உள்ளது காரணம் வீட்டு மனை பட்டா என்ற பெயரில் எந்த ஒரு அடிப்படை வசதியும் இல்லாமல் நிலத்தை மட்டும் வாடிக்கையாளர்களுக்கு கொடுத்துவிட்டு அடிப்படை வசதிகளை அரசாங்கத்தின் மூலம் பெறுகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் 10சென்ட் வீட்டு மனை பட்டா அரசாங்கத்தால் அனுமதிக்கப்படவில்லை என்பதும் தெரிந்தும் அதிகாரிகளை கையில் வைத்துக்கொண்டு 10சென்ட் நிலம் இவர்கள் வாங்கி அரசுக்கு இழப்பு ஏற்படுத்தும் வகையில் பதிவு செய்து வருகிறார்கள், எனவே இது சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மற்றும் கிராம நிர்வாக அலுவலர் முறையான ஒப்புதல் இருந்தால் மட்டுமே வீட்டுமனை பட்டாவுக்கு ஒப்புதல் வழங்க வேண்டும் இல்லையெனில் விவசாய நிலத்தை விவசாய நிலமாகவே பதிவு செய்யப்பட வேண்டும் என்பது அனைவருடன் எதிர்பார்ப்பு உடனடியாக நிறைவேற்றுவார்களா சம்பந்தப்பட்ட அதிகாரிகள்?


- கிருஷ்ணகிரி மாவட்ட செய்தியாளர் எஸ். சத்தியநாராயணன்

No comments:

Post a Comment

Post Top Ad