ஊத்தங்கரை அடுத்த சாமல்பட்டியில் தரைப்பாலத்தில் தேங்கும் தண்ணீரை சீரமைக்க கோரி பொதுமக்கள் சாலை மறியல்!! - தமிழக குரல்™ - கிருஷ்ணகிரி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Monday 16 October 2023

ஊத்தங்கரை அடுத்த சாமல்பட்டியில் தரைப்பாலத்தில் தேங்கும் தண்ணீரை சீரமைக்க கோரி பொதுமக்கள் சாலை மறியல்!!


கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அடுத்த சாம்பல்பட்டியில் ரயில்வே தரைப்பாலம் உள்ளது, இது கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்னர் அதிமுக ஆட்சியில் கட்டப்பட்டது, இந்த பாலத்தில் மழைக்காலங்களில் தண்ணீர் அதிக அளவில் தேங்கி நிற்பதால் இருசக்கர நான்கு சக்கர வாகனங்கள் தேங்கிய தண்ணீரை கடந்த செல்லும் பொழுது பழுதாகி நிற்பதும், போக்குவரத்து தடையும் ஏற்படுவதால் கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக இப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் கடும் அவதிக்கு உள்ளாகி வருகின்றனர்.

இந்தத் தரை பாலத்தில் தேங்கும் தண்ணீரை  சீரமைக்க கோரி சாமல்பட்டி பொதுமக்கள் அனைத்து கடைகளிலும் ஒரு நாள் மூடி விட்டு சாலை மறியலில் ஈடுபட்டனர்,இந்தப் போராட்டத்திற்கு விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மண்டல துணை செயலாளர் க,மோகன் என்கிற தமிழ் வளவன் தலைமை வகித்தார்.


திமுக ஒன்றிய பொருளாளர் சேகர், அதிமுக முன்னாள் மாவட்ட பொருளாளர் கோவிந்தராஜ்,  காங்கிரஸ் கட்சி சார்பில் முருகேசன் சக்தி உஸ்மான் மற்றும் வணிகர் சங்க நிர்வாகிகள் முன்னிலையில்,   100 க்கும் மேற்பட்டவர்கள் இதில் கலந்து கொண்டனர், சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த ஊத்தங்கரை டிஎஸ்பி பார்த்திபன், ஊத்தங்கரை காவல் ஆய்வாளர் பார்த்திபன் ஆகியோர் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்திய பிறகு கலைந்து சென்றனர்,


- கிருஷ்ணகிரி மாவட்ட செய்தியாளர் எஸ்.சத்தியநாராயணன் 

No comments:

Post a Comment

Post Top Ad