தொடர்ந்து நடக்கும் சாலை விபத்து நேரில் வந்து ஆய்வு செய்வாரா வட்டார போக்குவரத்து அலுவலர்!!! - தமிழக குரல்™ - கிருஷ்ணகிரி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Wednesday 18 October 2023

தொடர்ந்து நடக்கும் சாலை விபத்து நேரில் வந்து ஆய்வு செய்வாரா வட்டார போக்குவரத்து அலுவலர்!!!


கிருஷ்ணகிரி மாவட்டம் மத்தூர் ஒன்றியம் மற்றும் ஊத்தங்கரை ஒன்றியத்திற்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில் தொடர்ந்து விபத்துக்கள் நடைபெற்று வருகின்றன குறிப்பாக இன்று திருவண்ணாமலையில் இருந்து கிருஷ்ணகிரி நோக்கி சென்ற இருசக்கரா வாகனத்தில் ஆண் மற்றும் பெண் ஒரு சிறிய குழந்தை ஆகியோர் சென்று கொண்டு இருந்தபோது  ஓசூரில் இருந்து திருவண்ணாமலை நோக்கி வந்த கார் அதிவேகமாக இரு சக்கர வாகனத்தில் மோதி பயங்கர விபத்துக்குள்ளானது.

தகவல் அறிந்த மத்தூர் காவல்துறை உதவி ஆய்வாளர் பார்த்திபன் சம்பந்தப்பட்ட விபத்து நடந்த இடத்தை  ஆய்வு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார், மேலும் திண்டிவனம் செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் தான் அதிக விபத்துக்கள் ஏற்படுகின்றன, விபத்துக்கள்  ஏற்படுத்திய வாகனம் ஆய்வுக்கு போகும் போது வட்டார போக்குவரத்து அலுவலர் எதற்காக தொடர்ந்து விபத்துக்கள் ஏற்படுகின்றன என்று முறையாக கண்காணிக்கிறாரா என்பது பொதுமக்களுடமும் வாகன ஓட்டுடிகளிடமும் ஒரு அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.


முறையாக வாகன ஆய்வாளர் ஆய்வு மேற்கொண்டால் இது போன்ற விபத்துக்கள் நடைபெறாமலும் உயிர் சேதம் ஏற்படாமல் இருக்கும் என்று சமூக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் கூறி வருகின்றனர் எனவே உடனடியாக இதைப்பற்றி கருத்தில் கொண்டு இன்று நடைபெற்ற மத்தூர் ஒன்றியம் சுண்ணாம்பட்டி பட்லமாரியம்மன் கோயில்  அருகில் TN.70.M.0572.என்ற இந்த கார் விபத்து ஏற்படுத்தியது இதை முறையாக வட்டார போக்குவரத்து அலுவலர் ஆய்வு செய்வாரா? அங்குள்ள பொதுமக்கள் எதிர்பார்ப்பு மேலும் வட்டாரப் போக்குவரத்து அலுவலர் தொடர்ந்து தேசிய நெடுஞ்சாலையில் கண்காணிப்பு கேமரா பொருத்த வேண்டும் என்று தமிழக அரசுக்கு வேண்டுகோள் வைத்து கிருஷ்ணகிரி முதல் திண்டிவனம் செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் கண்காணிப்பு கேமரா பொருத்த வேண்டும் என்பது பொதுமக்களின் எதிர்பார்ப்பு நிறைவேற்றுவாரா வட்டார போக்குவரத்து அலுவலர்????


- கிருஷ்ணகிரி மாவட்ட செய்தியாளர்

எஸ். சத்தியநாராயணன் 

No comments:

Post a Comment

Post Top Ad