பொதுமக்களை குழப்பும் வகையில் அமைந்துள்ள ஊர் பெயர் திசை காட்டி தகவல் பலகை. - தமிழக குரல்™ - கிருஷ்ணகிரி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Saturday 21 October 2023

பொதுமக்களை குழப்பும் வகையில் அமைந்துள்ள ஊர் பெயர் திசை காட்டி தகவல் பலகை.


கிருஷ்ணகிரி முதல்  திண்டிவனம்  செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் ஊர் பெயர் கொண்ட தகவல்பலகையில் சிட்டிசன் திரைப்படத்தில் வரும் காட்சியைமிஞ்சும் வகையில் வரைபடத்தில் இல்லாத அத்திப்பட்டி கிராமத்தை போல் தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ள ஊர் பெயர் குறிக்கும் தகவல் பலகையில் மூக்கம்பட்டி, கொண்டிரெட்டிப்பட்டி, சாணிப்பட்டி  மற்றும் அத்திப்பள்ளம் போன்ற ஊர்களுக்கு மூக்கம்பட்டிக்கு பதிலாக ழுக்கம்பட்டி என்றும் கொண்டிரெட்டிப்பட்டிக்கு பதிலாக கெண்டிகாம்பட்டி சானிப்பட்டிக்கு பதிலாக சனிப்பட்டி என்றும்  அத்திப்பள்ளத்திற்கு பதிலாக அதிப்பள்ளம் என்று ஊர் பெயர் குறிக்கும் தகவல் பலகை நெடுஞ்சாலைத் துறையினரால் ஒப்பந்தார்களால் வைக்கப்பட்டுள்ளது.

இதனால் பயணிகள் மற்றும் வாகன ஓட்டிகள் மிகவும் அவதிக்குள்ளாகிறார்கள் மேற்குறிப்பிட்டுள்ள ஊர்கள் அத்திப்பட்டி கிராமத்தை போல வரைபடத்தில் இல்லாத கிராமத்தை இணைத்துள்ளார்கள் நெடுஞ்சாலை துறையினர், எனவே சம்பந்தப்பட்ட நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் பொதுமக்கள் இடம் விசாரணை மேற்கொண்டு இது போன்ற தவறான ஊர் பெயர் கொண்ட தகவல் பலகையை நீக்கிவிட்டு புதியதாக  அமைத்து தருவார்களா நெடுஞ்சாலைதுறை ஒப்பந்ததாரர்கள்  இதை கண்காணிப்பார்களா நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் என சமூக ஆர்வலர்கள் மற்றும் கிராம பொதுமக்கள் எதிர்பார்ப்பு.

கிருஷ்ணகிரி மாவட்ட செய்தியாளர்

எஸ். சத்தியநாராயணன் 

No comments:

Post a Comment

Post Top Ad