செங்கம் அருகே கார் மற்றும் அரசு பேருந்து மோதிய விபத்தில் கணவனின் தம்பி உயிரிழந்த தகவலை அறிந்த அதிர்ச்சியில் அண்ணன் மனைவி மாரடைப்பால் பலி. - தமிழக குரல்™ - கிருஷ்ணகிரி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Tuesday, 24 October 2023

செங்கம் அருகே கார் மற்றும் அரசு பேருந்து மோதிய விபத்தில் கணவனின் தம்பி உயிரிழந்த தகவலை அறிந்த அதிர்ச்சியில் அண்ணன் மனைவி மாரடைப்பால் பலி.


செங்கம் அடுத்த அந்தனூர் பகுதியில் திருவண்ணாமலை - பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் பாண்டிச்சேரியில் இருந்து பெங்களூரை நோக்கிச் சென்ற காரும் பெங்களூரில் இருந்து திருவண்ணாமலை நோக்கி சென்ற அரசு பேருந்தும் நேருக்கு நேர் மோதியது, இந்த விபத்தில் காரில் சென்ற 5 நபர்கள் சம்பவ இடத்திலேயே பரிதாவமாக உயிர் இழந்தனர்.


மேலும் 6 பேர் பலத்த காயத்துடன் செங்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டு இருந்த நிலையில் சிகிச்சை பலனின்றி மேலும் இரண்டு பேர் இருந்து ஏழு பேர் இறந்த சம்பவம் இப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.


மேலும் காரில் பயணித்து உயிரிழந்த ஊத்தங்கரை மாரப்பட்டி பகுதியைச் சேர்ந்த காமராஜ் இறந்த செய்தியை கேட்ட அதிர்ச்சியில் அவரது அண்ணன் கிருஷ்ணனின் மனைவி செல்வி (37) என்பவர் மாரடைப்பால் உயிரிழந்துள்ளார்.


கணவரின் தம்பி உயிரிழந்த செய்தியை கேட்டு துக்கம் தாலாமல் உயிரிழந்தது அப்பகுதியில் பெரும் பரபரப்பையும் சோகத்தையும் ஏற்படுத்தி வருகிறது.


- கிருஷ்ணகிரி மாவட்ட செய்தியாளர் எஸ் சத்தியநாராயணன்

No comments:

Post a Comment

Post Top Ad