அறிஞர் அண்ணா கல்லூரியின் நாட்டு நலப்பணி திட்ட மூன்றாம் நாள் களப்பணி. - தமிழக குரல்™ - கிருஷ்ணகிரி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Monday 12 February 2024

அறிஞர் அண்ணா கல்லூரியின் நாட்டு நலப்பணி திட்ட மூன்றாம் நாள் களப்பணி.


சேலம் பெரியார் பல்கலைக்கழக நாட்டு  நலப்பணித்  திட்டமும் மற்றும்  கிருஷ்ணகிரி  அறிஞர்  அண்ணா கல்லூரியின் நாட்டு   நலப்பணி  திட்டமும் இணைந்து  நடத்தும்    மூன்றாம் நாள்  களப்பணி.

கிருஷ்ணகிரி  அறிஞர்  அண்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் நாட்டு நலப்பணித் திட்டம் முகாம்   மூன்றாம்  நாள்  கங்கலேரி  மண்டு மாரியம்மன்  கோயில்  வளாகத்தை தூய்மைப்  பணி செய்தல் மற்றும் மரம் நடுதல்  களப்பணி  சேலம் பெரியார் பல்கலைக்கழகம்  நலப்பணித்திட்ட  ஒருங்கிணைப்பாளர்   முனைவர் S. சதீஷ் அவர்களின் வழிகாட்டுதலின்படி ஞாயிற்றுக்கிழமை  (11..02.2024) அன்று நடைபெற்றது . நாட்டு நலப்பணித்திட்ட  அலுவலரான I.ஸ்டீபன் விக்டர் ஆண்டனி வரவேற்புரை ஆற்றினார்.  


கல்லூரியின் முதல்வர்  முனைவர் சு. தனபால் அவர்கள் தலைமை  வகித்தார் . தன்னுடைய   தலைமை  உரையில்,  நமது கல்லூரி நாட்டு நலப்பணித் திட்ட மாணவ மாணவியர்கள்   உயர்கல்விக்காக அரசு வழங்கும் உதவித்தொகை திட்டங்களை பற்றி நன்கு தெரிந்து கொள்ள வேண்டும் . அரசு நலத் திட்ட உதவித்தொகைகளை மற்ற மாணவர்களும் பயனடையுமாறு   விழிப்புணர்வு செய்தல்  வேண்டும்  என்று பேசினார்.   சிறப்பு விருந்தினராக கிருஷ்ணகிரி அரசு ஆடவர் கலைக் கல்லூரியின் தாவரவியல் துறை தலைவர்  முனைவர் வே. ரவி அவர்கள்  அரசு வழங்கும் உதவித் தொகை  மூலம் மாணவர்கள் எவ்வாறு  உயர்கல்வி கற்று பயனடையலாம் என மாணவ மாணவியர்களுக்கு விரிவாக விளக்கினார். 


மேலும் சிறப்பு விருந்தினர்களாக  ஆரோக்கிய பாரதி பவுண்டேசன்  திருமதி. உமா மகேஸ்வரி,    சங்கீதா, இராணி, முத்துராஜ் மற்றும் IDBI வங்கி மண்டல மேலாளர்   திரு.திருமலை ஆகியோர் தற்காப்பு கலை குறித்த  நுணுக்கங்களை மாணவ மாணவியர்களுக்கு பயிற்சி அளித்தனர். சென்னை உமா  பவுண்டேஷன்  சார்பில்  திருமதி நிவேதா சமூக  நலத்திட்டங்கள் குறித்து  எடுத்துரைத்தார்.

 நாட்டு நலப்பணித்திட்ட அலுவலர் முனைவர் மா .ஜெகன் அவர்கள்  எடுத்துரைத்தார் .

மற்றும் ஊர் பொதுமக்கள் இளைஞர்கள்  சிறுவர்கள் பங்கேற்றனர் .  நாட்டு நலப்பணித்திட்ட  (அலகு 1,2,3 )  நூற்றுக்கு மேற்பட்ட மாணவ  மாணவியர்கள் பங்கேற்றனர் . மூன்றாம் நாள்  அரசு நலத்திட்டங்கள்  மற்றும் தற்காப்பு கலை நிகழ்ச்சிகளை கல்லூரியின் விலங்கியல் துறைத்  தலைவர்  முனைவர்  கோ. வேல்சாமி அவர்கள்  தொகுத்து வழங்கினார் . மூன்றாம் நாள்  களப்பணி  நிறைவாக நாட்டு நலப்பணித் திட்ட அலுவலர் இரா. சரவண குமார்  அவர்கள் நன்றியுரை கூறினார். 

No comments:

Post a Comment

Post Top Ad