அறிஞர் அண்ணா கல்லூரியின் நாட்டு நலப்பணி திட்டஇரண்டாம் நாள் களப்பணி சிறப்பு முகாம். - தமிழக குரல்™ - கிருஷ்ணகிரி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Saturday 10 February 2024

அறிஞர் அண்ணா கல்லூரியின் நாட்டு நலப்பணி திட்டஇரண்டாம் நாள் களப்பணி சிறப்பு முகாம்.


கிருஷ்ணகிரி  அறிஞர்  அண்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் நாட்டு நலப்பணித் திட்டம் முகாம்  இரண்டாம் நாள்  கங்கலேரி அரசு உயர்நிலைப்பள்ளி வளாகத்தை தூய்மைப்  பணி செய்தல் மற்றும் மரம் நடுதல்  களப்பணி  சேலம் பெரியார் பல்கலைக்கழகம்  நலப்பணித்திட்ட  ஒருங்கிணைப்பாளர்   முனைவர் S. சதீஷ் அவர்களின் வழிகாட்டுதலின்படி  சனிக்கிழமை (10..02.2024) அன்று நடைபெற்றது . நாட்டு நலப்பணித்திட்ட  அலுவலரான I.ஸ்டீபன் விக்டர் ஆண்டனி வரவேற்புரை ஆற்றினார்.  கல்லூரியின் முதல்வர்  முனைவர் சு. தனபால் அவர்கள்   தலைமை  வகித்தார் . 

தன்னுடைய   தலைமை  உரையில்,  நமது கல்லூரி நாட்டு நலப்பணித் திட்ட மாணவ மாணவியர்கள்   தன்னுடைய எண்ணங்களை தூய்மை செய்வது போல கங்கலேரி  கிராமத்தில்  தூய்மை பணி செய்வதில் சிறந்த விளங்க வேண்டும்.  மக்கள் பயனடையும் வகையில்  மரக்கன்றுகளை நட்டு சமூகச் சேவையாற்ற வேண்டும்  என்று பேசினார். 


வாழ்வியல் திறன் பயிற்சியாளர்  M.கோவேந்தன்  அவர்கள்  நேர்மறை எண்ணங்களை  வளர்த்தல் என்னும் தலைப்பில்  சிறப்பு விருந்தினராக கலந்து  கொண்டு சிறப்புரையாற்றினார்.   தன்னுடைய சிறப்பு உரையில், ஒவ்வொரு நாளும்   நேர்மறை எண்ணங்களை வளர்ப்பதன் மூலம்  வாழ்வில் உயர்ந்த நிலையை   அடையலாம் என்று பேசினார். தமிழ்நாடு  அறிவியல் இயக்கம்  நாடகக் கலைஞர்  திரு வெ. சங்கர்  செயலாளர்  அறிவியல் மற்றும் சமூகம் சார்ந்த விழிப்புணர்வு நாடகத்தை அரங்கேற்றினார். தன்னுடைய மெய்ப்பாடுகளால்  நடித்துக் காட்டி  மக்களுக்கு நல்லதொரு கருத்தினை  நாடகத்தின்  மூலம் விழிப்புணர்வு  ஊட்டினார்.


நாட்டு நலப்பணித் திட்ட இரண்டாம் நாள் களப்பணியின் திட்டமிடலை  நாட்டு நலப்பணித்திட்ட அலுவலர் முனைவர் மா .ஜெகன் அவர்கள்  எடுத்துரைத்தார் மற்றும் ஊர் பொதுமக்கள் இளைஞர்கள்  சிறுவர்கள் பங்கேற்றனர்.  நாட்டு நலப்பணித்திட்ட  (அலகு 1,2,3 )  நூற்றுக்கு மேற்பட்ட மாணவ மாணவியர்கள் பங்கேற்று   அறிவியல் சிந்தனைகள் சமூக சேவை குறித்த  விழிப்புணர்வு  நாடகங்களின் மூலம்  பல்வேறு  பொதுவுடை மை கருத்துகளை  தெரிந்து கொண்டனர். இரண்டாம் நாள்  அறிவியல் சமூக சேவை  நாடக நிகழ்ச்சிகளை கல்லூரியின் விலங்கியல் துறைத்  தலைவர்  முனைவர்  கோ. வேல்சாமி அவர்கள்  தொகுத்து வழங்கினார். இரண்டாம் நாள்  களப்பணி  நிறைவாக நாட்டு நலப்பணித் திட்ட அலுவலர் இரா. சரவண குமார்  அவர்கள் நன்றியுரை கூறினார்.

No comments:

Post a Comment

Post Top Ad