கிருஷ்ணகிரி அறிஞர் அண்ணா கல்லூரியின் நாட்டு நலப்பணி திட்ட முகாம் துவக்க விழா. - தமிழக குரல்™ - கிருஷ்ணகிரி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Friday 9 February 2024

கிருஷ்ணகிரி அறிஞர் அண்ணா கல்லூரியின் நாட்டு நலப்பணி திட்ட முகாம் துவக்க விழா.


கிருஷ்ணகிரி அறிஞர்  அண்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் நாட்டு நலப்பணித் திட்டம் முகாம் துவக்க விழா கங்கலேரி கிராமத்தில்  வெள்ளிக்கிழமை (09.02.2024) அன்று நடைபெற்றது. நாட்டு நலப்பணித்திட்ட  அலுவலரான I.ஸ்டீபன் விக்டர் ஆண்டனி வரவேற்புரை ஆற்றினார்.  கல்லூரியின் முதல்வர்  முனைவர் சு. தனபால் அவர்கள் முன்னிலை வகித்தார். தன்னுடைய  முன்னிலை உரையில்,  நமது கல்லூரி நாட்டு நலப்பணித் திட்ட  மாணவ மாணவியர்கள் சமூக சேவை செய்வதில் அனைவருக்கும் முன்மாதிரியாக திகழ வேண்டும் என்று பேசினார். 

 

கிருஷ்ணகிரி மாவட்ட  முதன்மைக்  கல்வி அலுவலரின் நேர்முக உதவியாளர் முனைவர் M. வெங்கடேசன் அவர்கள்  சிறப்பு விருந்தினராக கலந்து  கொண்டு சிறப்புரையாற்றினார். தன்னுடைய சிறப்பு உரையில், மாணவப் பருவத்தில் மக்களுக்கு சேவையாற்றும் வாய்ப்பினை நாட்டு  நலப்பணி திட்ட  மாணவ மாணவியர்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று சிறப்புரையில் பேசினார். நாட்டு நலப்பணித் திட்ட விளக்க உரையை நாட்டு நலப்பணித்திட்ட அலுவலர் முனைவர் மா .ஜெகன் அவர்கள் விளக்கினார் .


ஆரோக்கிய பாரதி தமிழ்நாடு R.கௌதம்  கலந்துகொண்டு யோகா பயிற்சிகள் குறித்து விளக்கினார். கிருஷ்ணகிரி திமுக மேற்கு ஒன்றிய செயலாளர்  D.தனசேகரன்,  கங்கலேரி  ஊர் கவுண்டர் G.M. வடிவேல், கிருஷ்ணகிரி ஆர். சி பள்ளியின் பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர்  G. K நாகராஜ் ஆகியோர்  கலந்து கொண்டனர். ஊர் பொதுமக்கள் நாட்டு நலப்பணித்திட்ட  (அலகு 1,2,3 )  நூற்றுக்கு மேற்பட்ட மாணவ மாணவியர்கள் பங்கேற்று  யோகா குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை தெரிந்து கொண்டனர். துவக்க விழாவின் நிறைவாக நாட்டு நலப்பணித் திட்ட அலுவலர் இரா. சரவண குமார்  அவர்கள் நன்றியுரை கூறினார்.

No comments:

Post a Comment

Post Top Ad