சந்தூர் தொடக்க வேளாண்மை வங்கியின் அவலநிலை. - தமிழக குரல்™ - கிருஷ்ணகிரி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Thursday, 25 January 2024

சந்தூர் தொடக்க வேளாண்மை வங்கியின் அவலநிலை.


கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி தாலுக்கா சந்தூர் கிராமத்தில் செயல்பட்டு வரும் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கியின் பழைய கட்டிடம் அடைந்து மேல் பகுதி ஓடுகள் அங்கு வந்து செல்வார்கள் மீது விழும் அபாயத்தில் உள்ளது பழைய கட்டிடம் என்பதால் பொதுமக்களின் உயிருக்கு ஆபத்தான நிலையில் உள்ளது, விவசாயிகள் உழவு செய்வதற்காக டிராக்டர் இயந்திரம் இந்த கட்டிடத்தின் முன் பகுதியில் நிறுத்தி வைக்கப்படுகிறது. கட்டிடங்கள் இடிந்து விழுந்தால் டிராக்டர் சேதம் அடையும் அபாயத்தில் உள்ளது.

கூட்டுறவு வங்கிக்கு வந்து செல்பவர்களுக்கும் பாதுகாப்பு இல்லை கட்டிடத்தின் மீது அரசமரம் வளர்ந்து கட்டிடம் விரிசல் ஏற்பட்டு விழும் நிலையில் உள்ளது இங்கு வந்து செல்லும் விவசாயிகளின் உயிருக்கு ஆபத்தான நிலையில் உள்ள அந்த கட்டிடத்தை அகற்றி புதிய கட்டிடம் கட்டித் தர விவசாயிகளின் சார்பாக பகுதியை சேர்ந்த சீனிவாசன் விவசாயி மாவட்ட நிர்வாகத்திற்கும் தமிழக அரசுக்கும் கோரிக்கை வைக்கின்றார்.

No comments:

Post a Comment

Post Top Ad