போச்சம்பள்ளியில் துணை வேளாண்மை அலுவலகம் முன்பு விவசாயி தீக்குளிக்க முயற்சி உடனடியாக விரைந்து வந்து தடுத்து நிறுத்திய காவல் துணை ஆய்வாளர் குமார். - தமிழக குரல்™ - கிருஷ்ணகிரி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Wednesday 24 January 2024

போச்சம்பள்ளியில் துணை வேளாண்மை அலுவலகம் முன்பு விவசாயி தீக்குளிக்க முயற்சி உடனடியாக விரைந்து வந்து தடுத்து நிறுத்திய காவல் துணை ஆய்வாளர் குமார்.


கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளி அடுத்த வெப்பாலம்பட்டி கிராமத்தை சேர்ந்த மணி (32) என்பவர் தனக்கு சொந்தமான 37 செண்ட் நிலத்தை பவர்கிரேடு நிறுவனம் உயர்மின் கோபுரம் அமைக்க கையகப்படுத்தியது. விவசாய நிலத்தில் உள்ள மரங்களுக்கு உரிய இழப்பீட்டு தொகை வழங்காமல் இருந்து வருவதாக அதிகாரிகளை கண்டித்து தனியொருவராக கடந்த 4 ஆண்டுகளாக பல்வேறு போராட்டங்களை நடத்தியுள்ளார் மணி. 

இவரது போராட்டங்களை கண்டு மனமிரங்கிய அதிகாரிகள் நேரில் சென்று ஆய்வுகள் மேற்கொண்டு அறிக்கை தர உத்தரவிட்டுள்ளனர். அதனடிப்படையில் போச்சம்பள்ளி வேளாண் அதிகளாரிகள், வருவாய் துறை அதிகாரிகள் கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு விவசாய நிலத்தில் உள்ள மரங்களை ஆய்வு செய்தனர். ஆய்வு செய்த விபரத்தினை அதிகாரிகளுக்கு அனுப்பாமல் உள்ளதாக தெரிய வருகிறது. இதனை கண்டித்து விவசாயி மணி இன்று போச்சம்பள்ளி துணை வேளாண்மை விரிவாக்க மையத்தின் முன்பு ஒரு லிட்டர் பெட்ரோல் கேனுடன் அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுக்கொண்டிருந்தார். 


ஆய்வு செய்த தகவல்களை அதிகாரிகளிடம் ஏன் அனுப்பாமல் உள்ளீர்கள் என வினவியதோடு, என்னை தற்கொலைக்கு தூண்டுகிறீர்கள் என வாதிட்டுள்ளார். விபரம் அறிந்து விரைந்து வந்த போச்சம்பள்ளி காவல் துணை ஆய்வாளர் குமார் அவரிடமிருந்த பெட்ரோல் கேனை பிடுங்கி, சமரச பேச்சு வார்த்தை நடத்தினார். ஆய்வு செய்த தகவல்களை அதிகாரிகளுக்கு விரைந்து அனுப்புவதாக உதவி வேலாண்மை அலுவலர் வல்லரசு உறுதியளித்ததையடுத்து விவசாயி மணி அங்கிருந்து சென்றார். 

No comments:

Post a Comment

Post Top Ad