சூளகிரி அருகே ஏரியில் 70 வயது மூதாட்டியின் சடலம் மீட்பு. - தமிழக குரல்™ - கிருஷ்ணகிரி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Saturday 20 January 2024

சூளகிரி அருகே ஏரியில் 70 வயது மூதாட்டியின் சடலம் மீட்பு.


கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி பேரிகை சாலையில் உள்ள ஏரியில் மூதாட்டியின் உடல் மீட்கப்பட்டு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


சூளகிரியை அடுத்த பேரிகை சாலையில் உள்ள துரை என்ற ஏரியில் மூதாட்டியின் சடலம் நீரில் மிதப்பதாக சூளகிரி காவல் ஆய்வாளர் திருமதி .தேவி அவர்களுக்கு தகவல் கிடைத்தது. தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல் ஆய்வாளர் தேவி மற்றும் காவல் உதவி ஆய்வாளர் வெங்கடேசன் சுமார் 70 வயது மதிக்கத்தக்க அடையாளம் தெரியாத மூதாட்டியின் உடலை மீட்டு தனியார் ஆம்புலன்ஸ் மூலம் கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.


இந்த நிலையில் அடையாளம் தெரியாத ஏரியில் இறந்த மூதாட்டியின் விவரம் குறித்து சூளகிரி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். சூளகிரி அருகே ஏரியில் மூதாட்டியின் சடலம் நீரில் மிதந்த சம்பவம் சூளகிரி சுற்றுவட்டார பகுதிகளில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

No comments:

Post a Comment

Post Top Ad