மத்தூர் ஊராட்சி சித்தாண்டி கொட்டாய் என்ற இடத்தில் பழுதடைந்து உள்ள சாலையை சீர் செய்ய சட்ட உரிமை நுகர்வோர் பாதுகாப்பு சங்கத்தின் மாவட்டத் தலைவர் மஹபூப் பாஷா கோரிக்கை. - தமிழக குரல்™ - கிருஷ்ணகிரி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Saturday 20 January 2024

மத்தூர் ஊராட்சி சித்தாண்டி கொட்டாய் என்ற இடத்தில் பழுதடைந்து உள்ள சாலையை சீர் செய்ய சட்ட உரிமை நுகர்வோர் பாதுகாப்பு சங்கத்தின் மாவட்டத் தலைவர் மஹபூப் பாஷா கோரிக்கை.

சட்ட உரிமை நுகர்வோர் பாதுகாப்பு சங்க தேசிய தலைவர் டாக்டர்.முத்துராமலிங்கம் ஆலோசனையின் பேரில் கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி தாலுகா மத்தூர் ஊராட்சியில் உள்ள 1-வது வார்டில் உள்ள மூக்க கவுண்டனூர் சித்தாண்டி கொட்டாய் தெருவில் ஊராட்சி நிர்வாகம் கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு குடிநீர் பைப் லைன் போடுவதற்கு தெருவில் உள்ள சிமெண்ட் சாலையில் உடைத்து குடிநீர் பைப் லைன் வீட்டிற்கு வீடு பைப் லைன் போடப்பட்டது ஆனால் பைப் லைன் போடப்பட்ட தெரு முழுவதும் சேதம் அடைந்தது உள்ளது.

இப்பகுதி குடியிருக்கும் பொது மக்கள் இருசக்கர வாகனத்தில் வீட்டிற்கு செல்ல மிகவும் சிரமப்பட்டு செல்லும் அவல நிலை உள்ளது இது சம்பந்தமாக பல முறை இப்பகுதி பொது மக்கள் ஊராட்சி நிர்வாகத்திடம் சிமெண்ட் சாலை சரி செய்து தர வேண்டும் என இப்பகுதி மக்கள் கூறியும் இதுநாள் வரை எந்த ஓர் நடவடிக்கையும் எடுக்கவில்லை என இப்பகுதி பொது மக்கள் கூறினார்கள். 


இதையடுத்து கிருஷ்ணகிரி மாவட்ட சட்ட உரிமை நுகர்வோர் பாதுகாப்பு சங்கத்தின் சார்பில் கிருஷ்ணகிரி மாவட்ட தலைவர் சமூக சேவகர் திரு மஹபூப் பாஷா அவர்கள் நேரில் சென்று பார்வையிட்டார். இது சம்பந்தமாக சட்ட உரிமை நுகர்வோர் பாதுகாப்பு சங்கத்தின் கிருஷ்ணகிரி மாவட்ட தலைவர் சமூக சேவகர் திரு மஹபூப் பாஷா அவர்கள் கூறியதாவது, இப்பகுதி முழுவதும் சிமெண்ட் சாலை நடுவில் தோண்டப்பட்டது முழுவதும் சேதம் அடைந்தது உள்ளது இப்பகுதி பொது மக்கள் போக வர சிரமப்பட்டு வருகிறார்கள்.


எனவே இப்பகுதி பொது மக்களின் நலனைக் கருதி மத்தூர் ஊராட்சியில் உள்ள சித்தாண்டி கொட்டை தெருவில் புதியதாக சிமெண்ட் சாலை அமைத்து கொடுக்க வேண்டும் என கிருஷ்ணகிரி மாவட்ட சட்ட உரிமை நுகர்வோர் பாதுகாப்பு சங்கத்தின் சார்பில் கோரிக்கை விடுத்துள்ளார்.

No comments:

Post a Comment

Post Top Ad