சூளகிரி அருகே 2 ஆயிரம் தினங்களாக ஆதரவற்றோர்களுக்கு உணவளித்து வரும் தன்னார்வலர்கள். - தமிழக குரல்™ - கிருஷ்ணகிரி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Saturday 20 January 2024

சூளகிரி அருகே 2 ஆயிரம் தினங்களாக ஆதரவற்றோர்களுக்கு உணவளித்து வரும் தன்னார்வலர்கள்.


கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரியில்  உயிருட்டல் அறக்கட்டளை என்ற தனியார் தொண்டு நிறுவனம் கடந்த 6 வருடமாக செயல்ப்பட்டு வருகிறது.


தமிழகம் உட்பட  இலங்கை, கேரளா, கர்நாடக, ஆந்திரா உள்ளிட்ட பகுதியில் ஆதரவற்றோர்களுக்கும், ஏழைக்களுக்கும் உணவு வழங்குவது முக்கியமாக செயல்ப்படுத்தி வருகின்றனர்.


இந்த நிலையில் கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரியில் உயிரூட்டல் அறக்கட்டளையின் 2000 ஆவது நாளாக இன்று நாகமலை என்னும் கிராமத்தில் உள்ள மலைவாழ் மக்களுக்கு 500 க்கும் மேற்பட்ட குடும்பங்களுக்கு உணவு வழங்கப்பட்டது.


தொடர்ந்து தமிழகம் உட்பட பல்வேறு பகுதியில் உள்ள ஆதரவற்றோர்களுக்கு அறக்கட்டளை நிர்வாகிகள் சார்பில் தினமும் உணவளித்து வரும் நிலையில் பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் பாராட்டி வருகின்றனர்.

No comments:

Post a Comment

Post Top Ad