கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கழகத் துணைப் பொதுச் செயலாளர் அ இ அ திமுக கே பி முனுசாமி அவர்கள் அம்மாவின் எதிர்மறையாக துக்கத்தை அனுசரித்த நாள். - தமிழக குரல்™ - கிருஷ்ணகிரி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Tuesday 5 December 2023

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கழகத் துணைப் பொதுச் செயலாளர் அ இ அ திமுக கே பி முனுசாமி அவர்கள் அம்மாவின் எதிர்மறையாக துக்கத்தை அனுசரித்த நாள்.


கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை தொகுதியில் மறைந்த முதல்வர் டாக்டர் ஜெ ஜெயலலிதா அவர்களின் 7ஆம் ஆண்டு நினைவஞ்சலி அ இ அ தி மு க முன்னாள் மாவட்ட செயலாளர் மற்றும் தற்போது அதிமுகவின் கழகத் துணை பொது செயலாளர் கே பி முனுசாமி அவர்களும் ஊத்தங்கரை சட்டமன்ற உறுப்பினர்  தமிழ் செல்வம், மறைந்த முதல்வரின் துக்க தினம் இன்று அனுசரிக்கப்பட்டது, டாக்டர் ஜெ ஜெயலலிதா அவர்களின் நினைவு நாளைக் கூட மறந்து தங்களது விளம்பர போஸ்டர்களில் இவர்கள் சிரித்துக் கொண்டிருப்பது போன்று புகைப்படம் வெளியிட்டு உள்ளார்கள்.

இது பொதுமக்களிடமும் மற்றும் கட்சியினரிடம் மிகவும் வருந்தத்தக்க செயலாக உள்ளது, மேலும் மறைந்த முதல்வர் பெண்களுக்கு என்று பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி "மக்களால் நான், மக்களுக்காக நான்" என்ற தார்மீக மந்திரத்தை உருவாக்கியவர் அவர், ஆனால் இதை எல்லாம் இவர்கள் தங்களது சுயலாபத்திற்காக கட்சியின் கோட்பாட்டை மறந்து ஊத்தங்கரை சட்டமன்ற தொகுதியில் அதிமுக துணை பொது செயலாளர் சட்டமன்ற உறுப்பினரும் மாவட்ட செயலாளரும் நினைவஞ்சலியை போற்றாமல் விளம்பரப் பலகையில் சிரித்துக் கொண்டிருப்பது கட்சியினரிடையே முகம்சுளிப்பை ஏற்படுத்தி உள்ளது. 


தமிழ்நாட்டை ஆண்ட இரும்பு பெண்மணியின் நினைவு அனுசரிப்பு நாள் இன்று, துக்கத்தை அனுசரிக்கும் நாளாக கட்சித் தொண்டர்கள் கருதி வருகின்றனர், ஆனால் இவர்கள் மறைந்த முதல்வர் துக்கத்தை அனுசரிக்காமல் தங்களது பிறந்தநாள் போன்ற நிகழ்வாக மாற்றியது, கட்சி பிரமுகர்களிடம், பெண்களிடமும் சலசலப்பை ஏற்படுத்தி வருகிறது. இது கட்சிக்கு இத்தொகுதியில் பின்னடையை ஏற்படுத்தும் என அக்கட்சியினர் கருத்தாக உள்ளது. உடனடியாக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தனிக்குழு அமைத்து ஊத்தங்கரை சட்டமன்ற தொகுதி ஆய்வு செய்வாரா என்பது கட்சி தொண்டர்களிடையே பெரும்பாலான கோரிக்கையாக உள்ளது.


- கிருஷ்ணகிரி மாவட்ட செய்தியாளர் எஸ். சத்தியநாராயணன். 

No comments:

Post a Comment

Post Top Ad