வேப்பனப்பள்ளி அருகே காவேரி கூட்டு குடிநீர் குழாய் உடைந்து பல்லாயிரம் லிட்டர் குடிநீர் சாலையில் வீணான சென்றது. பொதுமக்கள் அதிர்ச்சி. - தமிழக குரல்™ - கிருஷ்ணகிரி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Monday 26 February 2024

வேப்பனப்பள்ளி அருகே காவேரி கூட்டு குடிநீர் குழாய் உடைந்து பல்லாயிரம் லிட்டர் குடிநீர் சாலையில் வீணான சென்றது. பொதுமக்கள் அதிர்ச்சி.


கிருஷ்ணகிரி மாவட்டம் வேப்பனப்பள்ளி அருகே உள்ள நாச்சிகுப்பம் கிராமத்தில் காவிரி கூட்டுக் குடிநீர் திட்டத்தின் கீழ் நாச்சிகுப்பம் மணவாரனபள்ளி சிங்கிரிப்பள்ளி வரை கிராமங்களுக்கு குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. 


இந்த நிலையில் நேற்று நாச்சிகுப்பம் கிராமத்தில் சாலையோரத்தில் இருந்த குடிநீரி குழாய் உடைந்து சாலையில் சுமார் ஆயிரக்கணக்கான லிட்டர் தண்ணீர் வீணாகி சென்றது.  


இதனால் சாலையில் சுமார் ஒரு கிலோ மீட்டர் தொலைவிற்கு குடிநீர் சென்று சேரும் சக்தியும் மாறியது. இரவு முதல் விடியற் காலை 9 மணி வரை சாலையில் குடிநீராக வீணாக சென்றதால் பொதுமக்கள் வாகன ஓட்டிகள் அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் தகவல் இருந்து குடிநீர் குழாய்கள் குடிநீர் வினியோகம் நிறுத்தப்பட்டது. காவேரி குடிநீர் குழாய் உடைந்து இரவு முழுவதும் பல்லாயிரம் லிட்டர் குடிநீர் குழாய் உடைந்து விணாக சாலையில் சென்றதால் பொதுமக்கள் அதிர்ச்சியடைந்தனர்.

No comments:

Post a Comment

Post Top Ad