கிருஷ்ணகிரி அருகே 600 ஆண்டுகள் பழமையான கோவில் தேர் திருவிழா 3 மாநில பக்தர்கள் பங்கேற்று தேரை வடம்பிடித்து இழுத்தனர். - தமிழக குரல்™ - கிருஷ்ணகிரி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Tuesday 23 April 2024

கிருஷ்ணகிரி அருகே 600 ஆண்டுகள் பழமையான கோவில் தேர் திருவிழா 3 மாநில பக்தர்கள் பங்கேற்று தேரை வடம்பிடித்து இழுத்தனர்.


கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி அருகே உள்ள கோபசந்திரம் கிராமத்தில் பழமை வாய்ந்த தக்ஷண திருப்பதி வெங்கட ரமண சுவாமி கோயிலில் இன்று தேர் திருவிழா நடைபெற்றது.


கடந்த மாதம் தேர் திருவிழா கோயிலில் கொடி ஏற்றத்துடன் துவங்கியது இதில் வெங்கட ரமண சுவாமிக்கு பல்வேறு பூஜைகள் தொடர்ந்து நடைபெற்று வந்தன அதனை தொடர்ந்து தேர்த்திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேர் இழுக்கும் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது தேர் வீதியில் அலங்கரிக்கப்பட்ட திருத்தேரில் வெங்கடா ரமண சுவாமிகள் அமர வைக்கப்பட்டு பின்னர் பக்தர்கள் வடம் பிடித்து தேரை இழுத்தனர் இந்த திருவிழாவில் தமிழ்நாடு ஆந்திரா கர்நாடகா மாநிலங்களைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர். தேர் திருவிழாவில் நல்லப்பா குடும்பத்தினரால் ஸ்ரீராம கல்யாணம் எனப்படும் ஹரிஹதா நாடகமும் நடத்தப்பட்டது இதனை பொதுமக்கள் கண்டு ரசித்தனர்.

அதைப்போல இந்த திருவிழாவில் கடும் வெயிலையும் பொருட்படுத்தாமல் பக்தர்கள் ஆயிரக்கணக்கில் குடும்பத்துடன் சுவாமி தரிசனம் செய்தனர் அனைவருக்கும் நீர் மோர் பானங்கள் அன்னதானம் வழங்கப்பட்டது. இந்த தேர்த்திருவிழாவை முன்னிட்டு கோயிலில் பல்லக்கு திருவிழா நடைபெற உள்ளது,  மற்றும் நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை வெங்கடேஸ்வரா சுவாமி சேவா சங்கத்தினர் செய்திருந்தனர்.

No comments:

Post a Comment

Post Top Ad