சூளகிரி அருகே நூற்றாண்டுகள் பழமை வாய்ந்த தேர்திருவிழா நிறைவு: திருவிழாவை சிறப்பித்த 40 ஊராட்சிகளுக்கு கோவில் நிர்வாகத்தினர் நன்றி தெரிவிப்பு. - தமிழக குரல்™ - கிருஷ்ணகிரி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Wednesday 24 April 2024

சூளகிரி அருகே நூற்றாண்டுகள் பழமை வாய்ந்த தேர்திருவிழா நிறைவு: திருவிழாவை சிறப்பித்த 40 ஊராட்சிகளுக்கு கோவில் நிர்வாகத்தினர் நன்றி தெரிவிப்பு.


கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரியை அடுத்த தாசனபுரம் கிராமத்தில் 500 ஆண்டுகளுக்கும் அதிகம் பழமைவாய்ந்த ஸ்ரீ லட்சுமி வெங்கடரமணசுவாமி திருக்கோவில் அமைந்துள்ளது.


பிரசித்தி பெற்ற இக்கோவிலில் வாரந்தோறும் விஷேச பூஜைகள் நடத்தப்பட்டு வருகிறது, வருடம்தோறும் இக்கோவில் திருவிழா 5 நாட்கள் வெகுவிஷேசமாக நடத்தப்படும், இறுதி நாளில் பாரம்பரிய எருதுவிடும் விழா மிகவும் பிரபலம், இந்தாண்டும் கடந்த 13ம் தேதியன்று தொடங்கி அன்று ஸ்ரீனிவாச கல்யாண உற்சவமும் 14 ம் தேதி முக்கிய நிகழ்வான தேரோட்டம் நடத்தப்பட்டது.


அதனைதொடர்ந்து 15, 16 ம் தேதிகளில் பல்லக்கும் நேற்று பாரம்பரிய எருதுவிடும் விழா கோலகலமாக நடைப்பெற்றது. இதில் கர்நாடகா, ஆந்திரா, தமிழகத்தின் பல்வேறு மாநிலங்களை சேர்ந்த நூற்றுக்கணக்கான காளைகளும், ஆயிரக்கணக்கான பார்வையாளர்கள் பங்கேற்றிருந்தனர்.


கோவில் தர்மகர்த்தர்கள் வெங்கடாத்திரி மகன்கள் வெங்கடேஷ், நாராயணப்பா ஆகியோர் தலைமையில் நடத்த திருவிழாவில் சூளகிரி ஒன்றியத்திற்குட்பட்ட 40 ஊராட்சிகளை சேர்ந்த பொதுமக்கள் பங்கேற்று சிறப்பித்த நிலையில் பழமையான கோவிலில் பாரம்பரியம் மாறாமல் பங்கேற்ற பக்தர்களுக்கு கோவில் தர்மக்கர்தர்கள் நன்றி தெரிவித்துள்ளனர்.


அப்போது தோரிப்பள்ளி ஊராட்சி மன்ற தலைவர் பாப்பைய்யா, முனிராஜ், கிருஷ்ணப்பா, கோபால், வெங்கடேஷ், முனிகிருஷ்ணன் உள்ளிட்டோர் பங்கேற்றிருந்தனர்.

No comments:

Post a Comment

Post Top Ad