சூளகிரி அருகே 800 ஆண்டுகள் பழமைவாய்ந்த பிரசன்ன வெங்கடரமணசுவாமி கோவில் தேர் திருவிழா. - தமிழக குரல்™ - கிருஷ்ணகிரி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Tuesday 30 April 2024

சூளகிரி அருகே 800 ஆண்டுகள் பழமைவாய்ந்த பிரசன்ன வெங்கடரமணசுவாமி கோவில் தேர் திருவிழா.

 


சூளகிரி  அருகே 800 ஆண்டுகள் பழமைவாய்ந்த பிரசன்ன வெங்கடரமணசுவாமி கோவில் தேர் திருவிழா: நூறாண்டுகளுக்கு பிறகு நடந்த தேர் திருவிழாவில் பக்தர்கள் தேரை வடம்பிடித்து இழுத்து வழிபாடு.

கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரியை அடுத்த சப்படி என்னும் கிராமத்தில் மலை மீது பிரசன்ன வெங்கடரமனசுவாமி கோவில் அமைந்துள்ளது, 13ம் நூற்றாண்டில் கட்டப்பட்டுள்ள இக்கோவில் இன்றும் பழமை மாறாமல் கிராம மக்கள், இந்து அறநிலையத்துறை சார்பில் பராமரிக்கப்பட்டு வருகிறது.


சுற்றுப்பகுதி கிராம மக்கள் வழிபட்டு செல்லும் முக்கிய ஆன்மிக ஸ்தலமாக சப்படி பிரசன்ன வெங்கடரமணசுவாமி கோவில் உள்ளது, ஆண்டுதோறும் தேர்திருவிழா நடந்து வந்தநிலையில், கடந்த 100 ஆண்டுகளாக தேரோட்டம் நடைப்பெறாமல் இருந்து வந்தது.


கிராம மக்கள் நீண்ட முயற்சிக்கு பிறகு தேர் வடிவமைக்கப்பட்ட தேர்திருவிழா வெகு விமர்சையாக நடைப்பெற்றது.. அலங்கரிக்கப்பட்ட தேரில் ஸ்ரீதேவி, பூதேவி தாயாருடன் பிரசன்ன வெங்கடரமணசுவாமி அமர வைக்கப்பட்டு பக்தர்கள் கோவிந்தா கோவிந்தா முழக்கத்துடன் தேரை வடம்பிடித்து இழுந்து வழிபாடு மேற்க்கொண்டனர்.

No comments:

Post a Comment

Post Top Ad