சூளகிரி அருகே கிணற்றில் நண்பர்களுடன் குளிக்க சென்றபோது, இளைஞர் ஒருவர் நீச்சல் தெரியாமல் நீரில் மூழ்கியதால் சடலமாக மீட்கப்பட்ட சோகம். - தமிழக குரல்™ - கிருஷ்ணகிரி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Tuesday 30 April 2024

சூளகிரி அருகே கிணற்றில் நண்பர்களுடன் குளிக்க சென்றபோது, இளைஞர் ஒருவர் நீச்சல் தெரியாமல் நீரில் மூழ்கியதால் சடலமாக மீட்கப்பட்ட சோகம்.


கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரியை அடுத்த திராடி கிராமத்தை சேர்ந்த கோட்டேஷ் (19) என்கிற இளைஞர் தனது கிராமத்தின் நண்பர்களுடன் அருகே உள்ள விவசாய கிணற்றில் குளிக்க சென்றுள்ளனர்..


அப்போது நீச்சல் தெரியாமல் கிணற்றில் குதித்த கோட்டேஷ் தண்ணீருக்கு வெளியே நீண்ட நேரமாகியும் வராத நிலையில், உடன் இருந்த நண்பர்கள் அருகே இருந்த பொதுமக்களுக்கு தெரிவித்து கிணற்றில் தேடும் பணியில் ஈடுபட்டனர்


பின்னர் சூளகிரி போலீசார் தீயணைப்பு துறையினர் நீரில் மூழ்கிய இளைஞரை நீண்ட நேர தேடுதலுக்கு பிறகு சடலமாக மீட்டனர், தனியார் ஆம்புலன்ஸ் மூலம் கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக கோட்டேஷ் உடலை அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


நண்பர்களுடன் கிணற்றில் குளிக்க சென்ற இளைஞர் நீரில் மூ ழ்கி உயிரிழந்ததும் மீட்கப்பட்ட சடலத்தை பெற்றோர் பார்த்து கதறி அழுததும்  கிராம மக்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது...

No comments:

Post a Comment

Post Top Ad